பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தமிழர் வாழ்வு


இசை அளவுகளையும் அவற்றின் வழியே அமையும் பாலைப் பண் முதலியவற்றையும் பிறவற்றையும் விளக்குகிறார்.

'இசை' என்ற சொல்லுக்கு இசை, சொல், புகழ், இசைப்பாட்டு, இனிமை, ஏழிசை போன்ற பொருள்கள் உள்ளன. 'இசைப்பாட்டு' என்பதனைப் பிங்கலம் 'கீர்த்தி மிகுதி' என விளக்குகின்றது. இசைவு, இசைப்பு என்பன பொருத்தம் பற்றி வருவன. அப்படியே இசைமையும் புகழ், கல்வி, தறுகண், இசைமை, கொடை எனப் பலவகையில் அமையும் திறனைத் தொல்காப்பியம் (பொருள்.மெய்.9) விளக்குகிறது. எ ன வே பண், இசை இ ர ண் டு ம் உயிரினத்தை—சிறப்பாக மனித சமுதாயத்தை வேறுபாடற்ற வகையில் இணைத்துப் பிணைத்து, உயர்த்தி தொண்டு உளமுடையனவாய்—தூய மன நிறைவுடையனவாய் எல்லாரும் எல்லாமும் இன்புற்றிருக்கும் நல்வாழ்விற்கு நடத்திச் செல்வன என அறிதல் வேண்டும். ஆம், இசையும் பண்ணும் காதுக்கு மட்டும் சுவை ஊட்டுவன அல்ல கண்ணுக்கும் பிற உறுப்புக்களுக்கும் மட்டும் இன்பம் ஊட்டுவன அல்ல; அவை உள்ளத்துக்கு—உயிருக்கு—உணர்வூட்டி, தன்னலமற்ற, தியாக வாழ்வுக்கு மக்களை ஈர்த்துச் செல்வனவே. இந்த உண்மையினை ஆங்கிலப் பேரகராதி (Encyclopaedia Britanica—1927—Edition Vol. XVI P.3) ஓரளவு விளக்கிச் சொல்கிறது. "Music contrasted with the gymnsitic, it includes the Culture of the mind as distinguished from that of the body. The philosophers valued music both in the ancient general sense and in our restricted sense, chiefly as an educational element in the formation of charactor" என்பன அதன் அடிகள். எனவே, இங்கே அண்ணாமலை மன்றத்திலே அமர்ந்த தமிழ்இசைச் சங்கத்தின் வழியே பண் ஆராய்ச்சி செய்கின்றோம் என்றால், ஏதோ இது வெறும் பாட்டொலியினைப் பற்றிய ஆராய்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/52&oldid=1357991" இலிருந்து மீள்விக்கப்பட்டது