பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எது பண்?

51


மட்டுமன்று என்பதும், மனித சமுதாயம்-உயிரினம் உளத்தால் ஒன்றுபட்டு, பண்புற்று, ‘வையத்துள் வாழ்வாங்கு அனைத்தும் வாழ’ வழிவகுக்கும் ஓர் உயரிய-தேவையான-தெளிந்த- ஆராய்ச்சி என்பதும் உணரக் கிடக்கின்ற நிலை அறிந்து மேலே செல்வோம்.

பண் என்ற சொல்லின் பொருளினையும் பல்வேறு விளக்கங்களையும் கண்டோம். இப்பண்-இசையொடு: கலந்த பண்-மிகப்பழங்காலத்தில் சங்க காலத்தும் அதற்கு முன்பும் பொன்னே போல் போற்றப்பெற்று வந்தது. சங்க. இலக்கியங்களில் வரும் பாணனும் பாடினியும் கூத்தரும் விறலியரும் புகாத இடமில்லை; போற்றாத புலவரில்லை; அவர்களை ஏற்றுப் போற்றாத புவியரசரும் இல்லைஎங்குக் கேட்டாலும் ‘பண்’, ‘பாண்’ என்ற பேச்சே காதில் விழும். தொல்காப்பியர் இப்பண் ஒட்டிப் பாடும் பாடலைப். ‘பண்ணத்தி’ என்றே கூறுகின்றார். பண்ணை நத்தி வருவதால் அப்பெயர் பெற்றதென்பர். எனவே, அவர் காலத்துக்கும் முன் நாட்டில் வழங்கி, இலக்கிய மரபாகப் போற்றப் பெற்று, பின் இலக்கணத்திலும் இடம் பெற்ற அந்தப் பண் பற்றிய ஆராய்ச்சியே இன்னும் தொடர்ந்து நடைபெறுகின்றது.

பண்-மெய்ப்பாடுகள்

நான் முன் காட்டியபடி பண்ணின் செவிக்கின்பம், பாட்டோடு கலந்து வருவது மட்டுமன்று என்பதையும், மனித குலத்தை வாழ்விக்க நிற்கும் ஒளி விளக்கு. என்பதையும் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியல் முதல் சூத்திரத்தில் விளக்குகிறார்.

‘பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே கானான் கென்ய

(மெய்-1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/53&oldid=1356244" இலிருந்து மீள்விக்கப்பட்டது