பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தமிழர் வாழ்வு


என்ற முதற்குத்திரத்திற்கு உரையாசியர்கள் பல வகையில் பொருள் கொள்கின்றனர். ‘பண்ணை’ என்ற சொல்லுக்கு விளையாட்டு ஆயம் எனப் பொருள் கொள்கின்றனர். இது பொருந்துமா? அறிஞர் ஆராய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன். ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சங் கடுத்தது காட்டும் முகம்’ என்று வள்ளுவர் காட்டும் மரபுப்படி, உள்ளத்து நெகிழ்ச்சியினை வெளியே-மெய்யின்புறத்திலே காட்டும் மெய்ப்பாடுகள் பற்றி விளக்க ‘மெய்ப்பாட்டியல்’ எனப் பெயரிட்டு அதன் முதற் சூத்திரத்திலே, விளக்கங் காட்டும் மெய்ப்பாடுகள் பற்றிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து விளக்கத் தொல் காப்பியர் இச்சூத்திரத்தினைச் செய்தார் என்றால், அதை வெறும் விளையாட்டு அடிப்படையில் கொள்வது பொருந்துமா? ‘பண்ணை உடையது பண்ணை என்றாயிற்று’ என விளக்கந் தரும் உரையாசிரியர்கள், பண்ணின் அடிப்படையாகப் பண்ணையும், அதன் வழி யாக முகத்திலும் மெய்யிலும் தோன்றும் குறிப்பினையும் மறந்தது ஏனோ? ‘பண்ணை’ என்பது கூட்டம், மகனிர் கூட்டம் என்ற பொருளிலும் உள்ளது. எனினும் ஆட்டுப் பண்ணை, மாட்டுப் பண்ணை விலங்கினத்தைச் சுட்டுவது போன்று, மக்கட் பண்ணை எனச் சுட்டுவது மரபு நிலையாகக் கொள்ள இயலுமா?... ‘பண்ணை’ என்பது ‘ஆயத்தார்’ என்ற பொருளில் இருப்பினும் அப்பொருள் இங்கே ஏற்புடையதாகுமா? அப்படிக் கொண்டால், அபி மெய்ப்பாடு வெறும் விளையாட்டு விளைவிடம் மட்டும் தோன்றும் ஒன்றாகி நிற்காதா? மேலும் இதற்கு விளக்கம் கூறுகையில் இளம் பூரணர், அறிவுடையோர் அவைக் கண் தோன்றாமையின் ‘பண்ணைத் தோன்றிய என்றார்’ என்றும் ‘என்னை? நகைக்குக் காரணமாகிய எள்ளல் தோன்றாமையின்-பிறவும் அவை’ எனவும் கூறுகிறார். அறிவுடையார்கண் இந்த மெய்ப்பாடுகள் தோன்றா என்றால், செங்குட்டுவன் போன்ற பெரு மன்னனிடத்தும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/54&oldid=1356246" இலிருந்து மீள்விக்கப்பட்டது