பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எது பண்?

53


பெருஞ்சித்திரனார் போன்ற பெரும் புலவரிடத்தும், புலவராக வந்த இறைவனிடத்தும் பெரும் முனிவர்களிடத்தும் தோன்றிய மெய்ப்பாடுகளெல்லர்ம் பொய்யா? ‘அழுக்காறு என ஒரு பாவி’ என வள்ளுவர் சினந்து கூறுவது விளையாட்டா? அவை யாவும் இன்றேல் இலக்கியம் ஏது? அவற்றின் வழியமைந்த இலக்கணம்தான் ஏது? ‘ஐ’ என்ற எழுத்துச் சொல்லாக வரும்பேர்து, நுண்மை என்ற. பொருளிலும் தலைமை என்ற பொருளிலும் வழங்குவது உலக உண்மை. எனவே பண் என்ற நுண்மை-தலையாய உள்ளத்தெழும் உணர்வோடு பொருந்திய ஒன்றின் துண்ணுணர்வாலும் தலையாய உணர்வாலும் உடலின் புறத்தே தோன்றும் ‘மெய்ப்பாடுகள்’ எனத் தொல் காப்பியர் இயலுக்கே தோற்றுவாய் தந்து, பின் மேலே பல: வகைகளில் பின்வரும் சூத்திரங்களால் விளக்குகிறார் எனல் பொருந்துவதாகும். ‘இசைமை’ அல்லது ‘புகழ்மை’ என்ற தன்மையினைத் தொல்காப்பியர் அடுத்து வரும் சூத்திரத்தின் (9) வழியே பெருமிதத்தில் சேர்க்கின்றார் என்றால் அந்த இசையும் பெருமிதமும் விளையாட்டுப் பண்ணையோடு நிற்க வேண்டியவைதானா? அறிஞர் ஆராய்வார்களாக!

வள்ளுவரும் பண்ணும்

இந்தத் தொல்காப்பியத்தின் அடிப்படையிலும், ‘பண்’ என்பது இசையொடு பொருத்தி, உள்ள நிகழ்வாய், உயிரினத்தின் வாழ்வொடு பொருந்தி நின்று அந்த உயிரின் உணர்வுகளை உலகொடு பங்கிட்டுக் கொண்டு வாழ்தல் என்பேதயாகும். மற்றும் இந்தப் பண் என்ற சொல்லை. வள்ளுவர். எத்தனை இடங்களில்? எடுத்தாளுகிறார். அத்தனைக் குறட்பாக்களிலும், ஒரே ஒரு இடத்தில்தான் எடுத்தாளுகிறார். அதுவும் உலகியலாகிய கண்ணோட்டம் பற்றிக் கூறும் இடத்தில் மட்டுமே. பல சொற்களை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில்-பலவிடங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/55&oldid=1356252" இலிருந்து மீள்விக்கப்பட்டது