பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எது பண்?

55


நிலை கெட, இன்று இத்தகைய ஆராய்ச்சிகளும் தமிழ் இசைச் சங்கமும் தோன்றி நிற்கின்றன. தேவாரம் பாடிய தெய்வத் திருக்கோயில்களில் இன்று அத்தகைய தீந்தமிழ்ப் புண் இல்லை-பாடல் இல்லை. இசை மண்டபங்களிலும் வேற்றுப் பாட்டொலி கேட்கிறது. பள்ளிகளில் பண், இல்லை; படக்காட்சிகளிலோ சொல்லவே வேண்டிய தில்லை. நாட்டுப் புற இலக்கியங்களிலே-நாளேடுகளிலே. எங்கும் பண் இல்லை. இவ்வாறு வாழ்வின் அடிப்படையான பண்ணின் நிலை மங்க மங்க, அதன் அடிப்படையில் அமைந்த பண்பாடும் பிற நல்லியல்புகளும் நாட்டில் மெல்ல மறைந்து வருகின்றன. நல்ல வேளை, அத்தகைய அவல நிலையினைத் தடுக்க, தமிழ் இசைச் சங்கமும் அதனொடு தொடர்புடைய பிறவும் பண்ணாராய்ச்சியும் வளர்ந்து அவற்றை வாழ வைத்து, அதன் வழியே சமுதாய நலத்தினையும் வாழ வைக்க முயல்கின்றன. அவை ‘வாழ்க’ ‘வெல்க’ என வாழ்த்துகின்றேன்.

பசிப்பிணி மருத்துவன்

‘பண்’ என்ற சொல்லின் அடிப்படையில் பல சொற்கள்பண்பு, பண்பாடு, பண்ணியம், பண்ணத்தி, பண்ணை போன்றவை-உருவாவதைக் கண்டோம். ஆனால் ‘பண்’ அடிப்படையிலேயே பண்ணன் என்ற பெயருடையவன் வள்ளலாகத் தமிழகத்தில்-சங்க காலத்தில் வாழ்ந்தான் என்பதை அகமும் புறமும் நமக்கு உணர்த்தும்போது நாம் நம்மை மறக்க வேண்டாமா? பண் அடிப்படையிலே ஒருவன் இயற்பெயர்-அதுவும் பசிப்பிணி மருத்துவனாகி - தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாக வாழ்ந்த ஒருவன் பெயர் அமைகின்றது என்றால் - நாடளும் ஒரு மன்னன் சோழன் கிள்ளிவளவனால் பாராட்டுப் பெறும் அளவிற்கு யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய எனத் தன் வாழ்நாளையே தந்து வாழ்த்தும் அளவுக்கு அமைகின்றது என்றால் அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/57&oldid=1356266" இலிருந்து மீள்விக்கப்பட்டது