பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எது பண்?

57


நாட்டத்து அறுகாற்பறவை சிறுவெள்ளர்ம்பல் ஞாங்கர் ஊதும்’ (புறம்-70) நாடாகக் காட்டுகிறார். எனவே அவன் பெயரிலும் ஊரிலும் நாட்டிலும் பண் நடமாடுகின்றது. ஆம், அவன் பண்பாளனாக-மற்ற உயிர்களைத் தன்னுயிர் போல மதித்து உதவுபவனாக-மற்றவர் பசி நீக்கும் மருத்துவனாக அமைந்து, உதட்டாலும் உளத்தாலும் உற்ற செயலாலும் பண்ணினைப் போற்று கின்ற காரணத்தாலேயே பண்ணன் எனப் போற்றப் பெற்றான். மூதாட்டி ஒளவைக்கு எங்கோ கிடந்தெடுத்த நெல்லிக் கணியினை ஈந்த அதிகனைப் போற்றும் இத்தமிழ்கம், ஏனோ இப்பண்ணனையும் அவனுக்குத் தன் வாழ்நாளையே தரத் துணிந்த பெருமன்னன் கிள்ளி வளவனையும் மறந்துவிட்டது. ‘வாழ்க பண்ணன்’ என நாம் வாழ்த்துவோம்.

சமுதாயம் கண்ட வாழ்வு

இதுவரை பண் என்ற சொல்லின் அடிப்படையில் பல கண்டோம். இனி அப் பண்ணும் பண்ணொடு கலந்த இசைப் பாடலும் சமூகத்துக்கு என்ன நன்மை செய்கின்றன எனக் காணல் வேண்டும். இசை சமூகத்தை ஒன்றுபடுத்தி வாழ வைப்பதாகும். நான் மேலே காட்டியபடி, வெறும் காதளவு இன்பம் தருவது மட்டுமன்றி உயிர் வாழ்வின் இன்றியமையாப் பண்பு நலனைத் தருவது அது. மனிதன் மட்டுமன்றி ஓரறிவுடைய உயிர் தொடங்கி எல்லா உயிர்களும் தழைத்துத் தளிர்த்துத் பூத்துக் குலுங்க வழிவகுப்பது அது. ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதே பண்படியாகப் பிறந்த ஒன்றாகும். இந்த உண்மையினைப் பண்வழிப் பாண்மிழற்றும் பாணர் வாழ்வின் அடிப்படையிலும் அவர் மற்றவரை ஆற்றுப் படுத்தும் நெறியிலும் தொல்காப்பியர் விளக்கிக்காட்டுவர்.

‘கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி’

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/59&oldid=1356271" இலிருந்து மீள்விக்கப்பட்டது