பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தமிழர் வாழ்வு



பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்’

(தொல் : புறம், 88)

என்ற அடிகளின் படி, பண் வழியும் ஆடல்பாடல் வழியும் நிற்கும் கூத்தரும் பாணரும் பிறரும் செல்லும் நெறியினைக் காட்டுகிறார். அவர்கள் புரவலர்களைப் பாடிப் பரிசில் பெற்று வருகின்றனர். வருபவர் முன் அவர் போன்றே பண் நிறை மக்கள் வருகின்றார்கள். அவர் களைக் கண்டு மறையாமல்-அவர்களை ஒதுக்காமல்தாமே அவர்கள்முன் வலியத் தோன்றி, தாம் பெற்ற பெருவளத்தினை அவரும் பெறலாம் என ஆற்றுப் படுத்து கின்றனர். பிறர் வளம் கண்டு பொறாமைப்படும் இந்தப் பண்பற்ற உலகத்துக்கு இது புரியாத ஒன்றுதான். எனினும் அன்று பண் நிறைந்து வளர்ந்த சமுதாயம் கண்ட வாழ்வு அது.

மேலும் இந்த இசை வழியே வரண்டவர் வாழ்வு வளமாகும்; வற்றிய மரம் தளிர்க்கும்; இருண்ட உலகு ஒளி பெறும்; இன்னல் நீங்க இனிமை பெருகும். இந்த உண்மைகளையெல்லாம் பரஞ் சோ தி யார் விறகுத் தலையன்பாடிய இசை வழியாக விளக்குகின்றார்.

தருக்களும் சலியா முக்கீர்ச் சலதியும் கலியா நீண்ட
பொருப்பிழி அருவிக் காலும்நதிகளும் புரண்டு துள்ளா
அருட்கடல் விளைத்த கீத இன்னிசை அமுத மாந்தி
மருட்கெட அறிவன் தீட்டி வைத்த சித்திரமே ஒத்த
பைக்தலை விடவாய் நாகம் பல்பொறி மஞ்சை நால்வாய்
மத்தமான் அரிமான் புல்வாம் வல்லியம் மருட்கை எய்தித்
தத்தமாறு அறியா வாகித் தலைத்தலை மயங்கிச் சோர
இத்தலை மாவும் புள்ளும் இசைவயப்பட்ட அம்மா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/60&oldid=1356145" இலிருந்து மீள்விக்கப்பட்டது