பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பண்?

55


வன்தரை கிழிய வான்போய் வான்சினை கரிந்து நின்ற
ஒன்றறி மரங்களெல்லாம் செவியறி வுடைய வாகி
மென்தளி நீந்து போது விரிந்து கண்ணீரும் சோர
நன்றறி மாந்தர் போல நகைமுகம் மலர்ந்த மாதோ!

என்று பத்திரன் அடிமை யாம் என்று பாண் செய்து வென்ற இறைவன் பாடலை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இறைவன் பாடல் மட்டும் அன்றி எல்லாப் பாடல்களையும் யாரும் பண் ஒன்றப் பாடினால் இத்தகைய நல்ல பயன் விளையும் என்பது உண்மை. நம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தே இசை பற்றிய நல்ல வளர்ச்சியினைப் பயிருக்கு ஊட்டிய தன்மை நாடறிந்த ஒன்று. ஆக, இசையினால் மனிதன் மட்டுமன்றி, விலங்கு, பறவை, மரம், செடி, கொடி அனைத்தும் கட்டுப்படுத்தப் பெற்று, உளத்தாலும், உடலாலும், அகத்தாலும் புறத்தாலும் தூய நெறியில் வளர்க்கப் பெறும் என்பது கண்கூடு. எனவே, மேலே பரஞ்சோதியார் கூறியது வெறுங் கற்பனையாகாதே! அவர் கூறியது கற்பனை அல்ல என்பதை அண்மையில், இந்த அக்டோபர் 27 முதல் 30 வரையில் போபாலில் நடைபெற்ற அனைத்துலக இந்திய இசை பற்றிய கருத்தரங்கு (International Seminor of Indian music at Bhobal) திட்டமாகக் கூறியுள்ளது. அதை (Insight into universal language) என்ற தலைப்பில் ‘இந்து’ (The Hindu) இதழ் தன் 20.11-83 நாளிட்ட ஞாயிறு வாரப் பதிப்பில் நன்கு விளக்கியுள்ளது. இசை கொடிய விலங்குகளை அடங்கச் செய்யும்; கல்லைக் கனிவிக்கும்; வளையா முறுக்குடை மரங்களையும் வளைந்து கொடுக்கச் செய்யும் என அங்கே காட்டியுள்ளனர். (Music, said the poet, hath charms to sooth a savage beast, to saffere rocks or bend a knotted oak) அத்துடன் ஆங்கில நாடகப் பேராசிரியரான சேக்ஸ்பியர் (Shakespeare) இசை உணர்வற்ற மக்கள் - இசைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/61&oldid=1356175" இலிருந்து மீள்விக்கப்பட்டது