பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தமிழர் வாழ்வு


உருசா மக்கள்-கொலைகாரராகி வஞ்சகச் சூழ்ச்சியாளராகி - கொள்ளைக்காரராகி நாட்டில் உலவுவர் என்பதையும் சுட்டியுள்ளார். மேலும் அதே கருத்தரங்கில் உரையாற்றிய பிரான்சு நாட்டு அறிஞர் (Edith Eocoust of France) இசை மனித மனத்தின் நோய் நீக்கும் தன்மையினையும், மனத்தின் பல்வேறு உளைச்சல்களையும் மாறாட்டங்களையும் மாற்றி, பண்பட்ட வழியில் செலுத்துகின்ற நிலையையும் தெளிவாகக் கூறியுள்ளார். (Edith Eocoust of France explained the effect of Music on mind, especially Music theraphy. She explained vividly the different aberrations of the mind and the experiments that are being conducted through music to tackie them.–The Hindu 20-11-83) எனவே, நான் மேலே காட்டிய, இசை பற்றிப் பரஞ்சோதியாரும் பிறரும் சொல்லிய அனைத்தும் உண்மையல்லவா!

கொடுமை நீக்கும் இசை

மேலும் இந்த இசை, கொடுமைகளையெல்லாம் களையும் என்பதையும் மாற்றாரை மாற்றும் திறன் உடையதென்பதையும் சங்க கால இலக்கியங்களும் பிற்கால இலக்கியங்களும், காப்பியங்களும் நமக்குக் காட்டவில்லையா?

‘ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறுதலைப் பெயர்க்கும் மருவின் பாலை’

என்ற அடிகள், வழியிடை வருவாரை வருத்திப் பொருள் பறிக்கும் பாலை நிலைத்து மக்கள் தாம் கொண்ட படையினையும் விட்டு அருளின் மாறுபட்ட மருளின் தன்மையையும் மறந்து, நல்வழிப்பட நடத்தும் தன்மையது. பாலைப் பண் என்பதை உணர்த்துகின்றனவே! இத்தகைய பண்புடைப் பண் நாட்டில் நல்ல நிலையில் இருந்தால் இசைக்கப் பெற்றால் - உருக வைத்தால் எத்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/62&oldid=1356190" இலிருந்து மீள்விக்கப்பட்டது