பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எது பண்?

61


எத்தனை வேறுபாடுகள் இல்லாமல் மறையும் என எண்ணி ஏங்க வேண்டி உள்ளதன்றோ! ஆம்! அப் பண்இசை-எங்கே? ஏட்டில் இருக்கிறது - இலக்கணத்தில் உள்ளது. ஆனால் நாட்டில் நடமாடவில்லை. நடமாட் நாம் விடவில்லை. அதனாலேயே நாட்டில் நாற்பத்தெட்டாயிரம் கட்சிகளும் மாறுபாடுகளும் பிற வேறுபாடுகளும் தோன்றி, ஒருவர் மேல் ஒருவர் வசைப் படை-பழிப்படை-பிற படைகளை விட்டு அழிக்க முற்படுகின்றனர். அண்ணாமலை மன்றத்தில் எழும் இப் பண்ணிசை -பாட்டொலி தமிழ் நாட்டில்-பரந்த பாரதத்தில்-விரிந்த உலகில் அந்தப் பழைய அமைதி நிலையை-ஒன்றிய உணர்வினை உயர்ந்த மனிதப் பண்பாட்டை-உள்ளத்து நல்லுணர்ச்சியினை உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன். அந்த நல்ல விருப்பத்துக் கிடையில் இப் பண்ணாராய்ச்சி அரங்கினை உங்கள் அனைவர்தம் நல்வாழ்த்தொடு தொடங்கி வைக்கிறேன்.

பண்ணின் வகை, திறன், பிற நிலைகளைப் பற்றியெல்லாம் இங்கே பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்யும் பெரும் புலவர்களும், இசைப்பேரறிஞர்களும், ஓதுவா மூர்த்திகளும், நல்லறிவாளர்களும், பிறரும் பல்வேறு முறைகளில் தெளிவாகக் காட்டியிருப்பார்கள். எனவே, அவற்றின் அடிப்படைகளைக் கூட அறியாத நான் அவை பற்றி விளக்க நினைப்பது தவறாகும் - விளக்கவும் முடியாது - தேவையும் இல்லை. அவை பற்றியே மேலும் கூறி உங்கள் பொன்னான நேரத்தைக் போக்கடிக்கவும் விரும்பவில்லை. எனினும் என் உள்ளத்து எழுந்த ஒரே எண்ணத்தை மட்டும் உங்கள் முன் வைத்து விடை பெறுகின்றேன்.

மக்கள் இயக்கமாக மலர

கடந்த அரை நூற்றாண்டின் அளவாக இத் தமிழ் இசைச் சங்கமும் அதை ஒட்டிய பண்ணாராய்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/63&oldid=1356276" இலிருந்து மீள்விக்கப்பட்டது