பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. எது அறிவு ?

உலகின் உயிர்த் தோற்ற வளர்ச்சி அடிப்படையில் அறிவு வளர்ச்சியினை அமைதிப்படுத்திக் காட்டுவார் அறிஞர். தொல்காப்பியர் ஓரறிவுடைய உயிர் வகை தொடங்கி ஐயறிவுடைய உயிர் வகை வரையில். புல் முதல்மக்கள், விலங்கு, புள் வரையில் – உயிர் வளர்ச்சி பற்றி விளக்கங் காட்டித் தெளிவுறுத்தியுள்ளார். இந்த ஐவகை அறிவும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற புலன்கள் வழியே ‘கண்டு கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும்’ செயல்களாக அமைவனவாகும். இவை பெற்றமை கொண்டு, ஒவ்வொரு உயிர் வகையும் பிரித்துப் பகுத்துப் பார்க்கப்பெற்று முறைப்படுத்தப்படுகின்றது. ஆயினும் இவற்றுக்கு மேலாக உள்ள ஆறாவது அறிவைப் பெற்றவர் மனிதர் எனத் தொல்காப்பியர் தொடங்கி, இன்றைய உலக அறிஞர்கள் அனைவரும் கூறுகின்றனர். நல்லதன் நலனும் தீயதன் தீமையும் பகுத்தறிந்து, வாழ்வாங்கு வாழ வழி வகுக்கும் இந்த ஆறாவது அறிவைப் பெற்ற மனிதரை ‘மக்கள்’ எனவும், மனித உடம்போடு கூடியும் இந்த அறிவு இல்லாதவரை மாக்கள் எனவும் பிரிப்பர் நல்லோர். ஆனால் இன்று உலகில் இந்த உண்மையினை ஏற்றுக் கொள்வார் மிகச் சிலரேயாவர். மனிதனாகப் பிறந்தவர் யாவருமே ஆறறிவுடையவர்தாம் என வாதிப்பர். அவர்கள் அந்த ஆறாவது அறிவினைப் பெறாதவர்களேயாவர்.

மனிதனாகப் பிறந்து உண்பன உண்டு உடுப்பன. உடுத்து, காண்பன கண்டு காலம் கழிக்கும் இன்றைய மனித இனத்திலே, இத்தகைய தொல்காப்பியரும் பிற தெய்வப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/69&oldid=1356461" இலிருந்து மீள்விக்கப்பட்டது