பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தமிழர் வாழ்வு


புலவரும் சுட்டிய ஆறாவதாகிய பகுத்தறிவை உணரக் கூடிய பண்பு ஒரு சிலரிடத்திலே மட்டுமே உள்ளது. அறிவுக்குக் கல்வி . அடிப்படை என்ற உண்மையினை வள்ளுவர் சுட்டிக் காட்டுகின்றார். “தொட்டனைத் துறும் மணற்கேணி, மாந்தர்க்குத் கற்றனைத் துாறும் அறிவு” (396) என்ற குறள், கற்கக் கழிமடம் அஃகி அறிவு வளரும் என்று காட்டுகின்றது. இதைக் காட்டி, எப்படியோ பட்டம் பெற்றுப் படித்தவராகி நிற்கின்ற பலரும் தம்மை அறிவுடையார் எனப் பறைசாற்றி முழங்குகின்றனர். படித்தோ படிக்காமலோ எழுதியோ பிறரை எழுத வைத்தோ எப்படியோ எங்கிருந்தோ பல்வேறு பட்டங்களைப் பெற்று வாழ்வில் உயர்ந்து வளர நினைக்கும் பலர் தங்களை ‘அறிஞர்’களாகக் கூறிக் கொள்ளும் ‘நாகரிக’க் காலத்தில் வாழ்கின்றோம் நாம். வாழ்வுக்குத் தேவையற்ற பாடத்திட்டங்களில் தம்மைப் பறிகொடுத்து இளமையை வறிதே கழித்துப் பின் படித்த படிப்புக்குத் தொடர்பல்லாத ஏதோ ஒரு பணியில் தம் வாழ்வை அமைத்துக்கொள்ளும் இன்றைய மனித் சமுதாயத்துக்கு உண்மையான கல்வியோ அறிவோ அறிய முடியாதனவாம்; இத்தகைய உலக மக்களை எண்ணி வருந்திய காரணத்தால்தான் வள்ளுவர் கல்வி, அறிவு இரண்டினையும் தனித்தனியாகவும் இணைத்தும் உலகுக்கு உணர்த்துகின்றார். வள்ளுவர் உணர்த்திய உண்மையினை அறியாத காரணத்தினால்தான் உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது.

இன்று படித்தவர்களாகத் தம்மைக் கூறிக்கொள்ளும் தலைவர்களால்தானே உலகில் எல்லாக் கொடுமைகளும் நடக்கின்றன. ஒரு தலைமுறையில் இருபெரும் போர்கள் படிக்காதவர்களாலா தொடங்கி நடத்தப் பெற்றன? உலகில் உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் பிற வேறுபாடுகளும் சாதிப்போராட்டங்களும் சமயப் போராட்டங்களும் படிக்காதவர்களாலா நடத்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/70&oldid=1356509" இலிருந்து மீள்விக்கப்பட்டது