பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது அறிவு?

69


பெறுகின்றன? படிக்காத் ஏழைத் தொழிலாளிகளைக் கூட்டி மடக்கி, நாள்தோறும் வேலை நிறுத்தங்களும் பிற கொடுமைகளும் செய்கின்றவர்கள் படிக்காதவர்களா? வஞ்சகமும் பொய்யும் வாழ்விடை விரவ, தாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற கொடிய எண்ணம் கொண்டு, பண்டங்களை முடக்கி, இல்லாத கொடுமையை உண்டாக்கி, விலையினை ஒன்றுக்குப் பத்தாக ஏற்றி விற்பவர் படிக்கத் தெரியாதவர்களா? எதற்கெடுத் தாலும் கையூட்டே கதி என எண்ணி அலுவலகங்களில் அல்லும் பகலும் வருவாரை வழி நோக்கி இருப்போர் படிக்காதவர்களா? இப்படியே பலப்பல வகையில் நல்லவர் உள்ளங்க்ள் நாடொறும் எண்ணி எண்ணி நைவதை நாம் காண்கிறோம், இவற்றிற்கெல்லாம். அடிப்படைக் காரணம் என்ன? ஆம்! வள்ளுவர் கல்விக்கும் அறிவுக்கும் காட்டிய விளக்கத்தினைச் சமுதாயம் அறியாத ஒன்றே காரணமாகும். அறிந்தும் செயல்படாத நிலையில் சிலர் வாழலாம்! அவர்களுக்கென இரக்கப்பட வேண்டுவதே.

இன்று பல கோடி, ரூபாய்கள் கல்விக்கெனச் செலவாக்கப் பெறுகின்றது. ‘ஆழ உழுவதிலும் அகல உழு’ என்பது கல்வித் துறையின் புதுமொழியாகின்றது. எல்லோருக்கும் எழுத்தறிவு வேண்டும் என்ற முயற்சியில் எத்தனையோ வகையில் அரசாங்கங்கள் செயல்படுகின்றன. இவை யாவும் வரவேற்கத் தக்கனவே. ‘எல்லோரும் எல்லாச் செல்வமும்’ – கல்விச் செல்வம் உட்பட – பெற வேண்டுவதே சமுதாய நெறி; ஆனால் அந்த நெறியைப் பின்பற்றுவதில்தான் சங்கடங்கள் உண்டாகின்றன. எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு (392) என்ற வள்ளுவர் வாக்கின்படி ‘எழுதப் படிக்க – கூட்டல் கழித்தல் போடக் கற்றுத் தந்தால் மட்டும் போதும்; வள்ளுவர் வாக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/71&oldid=1356552" இலிருந்து மீள்விக்கப்பட்டது