பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தமிழர் வாழ்வு


நிறைவேற்றி விட்டோம் என்று அமைதி கொள்ளமுடியாது. வள்ளுவர் அக்கல்வியினையும் அதன் வழியே காட்டும் அறிவினையும் விளக்கும் நெறியினை எண்ணி அதன் வழி மக்களை ஆற்றுப்படுத்துவதே அறிவுடைமையாகும். கல்வியை அமைத்து, கேள்வியை அமைத்து, கல்லாமையைச் சுட்டி, அவற்றின் வழி அமையும் அறிவுடைமையைத் தொடர்ந்து காட்டிச் சமுதாயம் வாழ வழி வகுத்த வள்ளுவர் திறனை எண்ணிப் பார்க்க வேண்டும். அத்துடன் அந்த அறிவினை வள்ளுவர் பால்தொறும் பகுதிதொறும் வேண்டும் இடங்களிலெல்லாம் சுட்டி உணர்த்தியுள்ள தன்மையினையும் நன்கு உணர வேண்டும்.

படிக்க வேண்டியதை நன்கு குற்றமறப் படிக்க வேண்டும் என்கிறார். ‘கற்க கசடறக் கற்பவை’ என்பது குறள். முதலாவதாக அதை நாம் செய்கிறோமா? படிக்க வேண்டாதவற்றையல்லவா ஆயுள் முழுவதும் படிக்கிறோம். பள்ளியிலோ, கல்லூரியிலோ தேவையற்ற பாடங்கள்-என்றோ ஆங்கிலேயன் வகுத்த புாடமுறையாராவது பெரியவர்ட்வெளிநாடு சென்று எதையாவது கண்டு வந்து பின்பற்றச் சொன்னால் பற்றும் முறை-பின் வேண்டாமென்று விடும் முறை-தேர்வுகளின் வேடிக்கை. இப்படி நம் நாட்டுக் கல்வி முறை அமைகிறது. ‘0’ எண்களெல்லாம் நூற்றுக்கு எண்பது ஆகும் விந்தை நாகரிகம் வாழ்வின் மேற்படி. இப்படிப் படிக்காததை யெல்லாம் படிப்பதாக நினைக்கும் கல்லூரி-பள்ளி வர்ழ்வு கழிந்த பின், பெரியவர்களுக்கு எத்தனை எத்தனை வேண்டாத பத்திரிகைகள்-கெடுக்கும் கதைகள்-கவர்ச்சி கரமான படங்கள் – பாடங்கள் உருவாகின்றன! இவற்றையா வள்ளுவர் படிக்கச் சொன்னார்? அவர் சொன்னதைப் படிக்காத காரணத்தினால் நாட்டில் நல்ல கல்வியுமில்லை; அறிவும் இல்லை.

கற்று அறிந்தவர் எப்படிச் சமுதாயத்தோடு ஒன்றி வாழவேண்டும் என்பதை வள்ளுவர் விளக்குவார். சுற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/72&oldid=1356613" இலிருந்து மீள்விக்கப்பட்டது