பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது அறிவு?

71


அறிந்தார் உலகம் வாழத் தாம் வாழ்பவர்-உலகம் வாட அதற்காகத் தாம் வாடுபவர் - உலகம் இன்புறத் தாம் இன்புறுவர். தாமின்புறுவது உ ல கி ன் புற க் கண்டு காமுறுவர் கற்றறிந்தார் (399) என்பது அவர் காட்டிய வழி. கற்றார் என்னாது கற்றறிந்தார்' என்று பின் காண இருக்கும் அறிவுக்கு விளக்கமாக முன்னரே இதைச் சுட்டுகிறார். ஆம்! கல்வியும் அறிவும் எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்று அறியா நல்ல நெறியில் மக்களை சமுதாயத்தை – உயிரினத்தை அழைத்துச் செல்வனவாகும்.

இன்றைய கல்வி இதையா உணர்த்துகின்றது? நல்ல கல்வி அமையாக் காரணத்தால் ‘அறிவு’ம் நிலை கெடுகிறது.

இன்றைய கல்வி மற்றவர் வாழத் தாம் வாழும் நெறிக்கு மாறாக, மற்றவர் வாடத் தாம் வாழும் நெறிக்கல்லவா வழி கோலுகிறது. ஒரு பதவிக்கு, நாளிதழில் விளம்பரம், படித்தவர் வேண்டும் எனக் கேட்டு வருகிறது எனக் கொள்வோம். அதற்கு ஆயிரம் படித்தவர்கள் விண்ணப்பம் செய்வர். இருப்பது ஓர் இடம்; நேர்முகத் தேர்விற்கு வர அனுமதி பெற்றவர். ஐம்பதின்மர், அத்தனை பேர் உள்ளத்திலும் என்ன எண்ணம் உருவாகும்? மற்றைய தொள்ளாயிரத்துத் தொண்ணுற்று ஒன்பது பேரும் – நாற்பத்தொன்பது பேரும் கெட, நாம் மட்டும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம்தானே எழும். இன்றைய கல்வி அளிக்கும் மனப்பான்மைதானே இது! ஆக யாவரும் யாவையும் கெட, தான் ஒருவன் மட்டும் வாழ வேண்டும் என்பதற்காகவா – கொடிய சமுதாய அழிவுக்கு வழிகோலும் கல்விக்காகவா – கோடி கோடியாகப் பணம் செலவாகிறது. இது ஒரு மேற்கோள். இப்படிப் பல காட்டலாம். இவற்றையெல்லாம் கண்டுதானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/73&oldid=1356624" இலிருந்து மீள்விக்கப்பட்டது