பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது அறிவு?

79


போன்று, பலர் பலவகையில் பேசுவதைத் தேர்ந்து தெளிந்தாலன்றி வையத்து வாழ்வாங்கு வாழ முடியாது. அத்தேர்ந்த தெளிவைத் தருவது அறிவாகும். பின் தாம் சொல்வதைக் கூட்டியும் குறைத்தும் சொல்லாமல் தெளிவாகவும் மற்றவர்களுக்கு விளங்குமாறும் சொல்லு வதோடு, பிறர் கூறும் நுண்ணிய பொருள் பற்றிய சொற்களையும் ஆய்ந்து உணர்தலும் அறிவாகும் என்கிறார். மற்றும் அவற்றிற்கெல்லாம் மேலாக அடுத்த இருகுறள்களிலும் அறிவின் செயற்பாட்டினை விளக்கு முகத்தான் வள்ளுவர் உயர்ந்தோராகிய உலகத்தாருடன் கலந்து பயின்று உற்றாராகி அந்த நிலை என்றும் குறையாத வகையிலும் கூடுதலாகி, மற்றவர்க்குத் தீங்கு செய்யாவகையிலும் அமைவது எனக்காட்டுகிறார். ஒட்பம், அறிவு என்பன ஒரு பொருள் சொற்கள். எனவே ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்றபடி அந்த உயர்ந்தோர் காட்டும் வையத்தை வாழ வைக்கும் நெறியில் ஒழுகி நின்று – அந்நெறியில் தாழாமலும் தருக் குற்று அழியாமலும் ஒருபடித்தாக நின்று – அவ்வுலக ஒழுகலாறு நிலைகெடாமல் பார்த்துக்கொள்வதே நல்ல அறிவாகும். அந்த நெறி தீதில் நெறியாக அமைவதையும் அதை உலகோடு தழுவிப் போற்றுவதையும் வற்புறுத்து வதற்கென்த் தீதொரீஇ தழீஇயது என இரண்டிடத்தும் வள்ளுவர் அவற்றை உயிரளபெடையிட்டு உயர்த்திக் காட்டுகிறார். அளபெடை அசை நிறைக்க வருவதாக இலக்கணப் புலவர்கள் கொள்ளலாம். ஆனால் வள்ளுவர் பாடல்களில் அசையோ அசை நிறைவோ இல்லை என்பதையும் ஏகாரம் ஒகாரம் போன்ற அசைகளும் அளபெடைகளும் ஆழ்ந்த பொருட் செறிவுகளை உணர்ந்துவனவே என்பதையும் கற்றோர் அறிவர். இந்த உலகம் தழுவும் நெறியினை இங்கே சுட்டிய வள்ளுவ்ர், தழுவாதவர் உலகில் மக்களாக அன்றி அலகையாகபேயாகத் திரிவர் என்பதைப் பின் புல்லறிவாண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/77&oldid=1356823" இலிருந்து மீள்விக்கப்பட்டது