பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது அறிவு?

81


நம் சமய நெறியும் தத்துவ நெறியும் இன்றைய விஞ்ஞான நெறியும் உயிர்கள் அனைத்தும் சமம் என்றே உணர்த்துகின்றன. நாம் முதலிலேயே தொல்காப்பியர் காட்டிய உயிர் வளர்ச்சி புலன் அறிவு அடிப்படையில் அமைவதைச் சுட்டிக் காட்டியுள்ளோம். எனவே உயிரினம் வாழ வழி காண்பதே சான்றாண்மையும் அறிவும் அறமும் உடையார்தம் செயலாக அமைய வேண்டும். எவ்வுயிரும் ‘பராபரம் சந்நிதியாகும்’ என உணர்ந்து எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி இரங்கும் நிலை பெறுவதே மனிதனாகப் பிறந்து ஆறு அறிவும் பெற்ற பயனாகும். தம்மை ஒறுத்தார்க்கும் நலம் செய்யும் தன்மையை வள்ளுவர் பலவிடங்களில் சுட்டுகின்றார். அறிவு அந்த நெறியில் மனிதனை ஆற்றுப்படுத்தும் ஒன்றாக அமைகின்றது. அந்த அறிவுதான் அறிவு வகைகளிலெல்லாம் சிறந்த அறிவாகும். படிப்பாலும் பிறவற்றாலும் பெறுகின்ற – அறிவினுளெல்லாம் தலையாயது – சிறந்தது – வையத்தை வாழ வைப்பது அத்தகைய மெய்யறிவேயாகும். வாழும் உயிர்களின் நிலையறிந்து அவற்றை ஓம்பி – அவை நமக்குத் தீங்கிழைத் தாலும் மறந்து-அவை வாழத் தாம் வாழ நினைப்பதே நல்ல அறிவு என்பதை வள்ளுவர் இல்லற இயலிலேஅறத்துப் பாலிலே – தீவினை அச்சம் என்னும் அதிகாரத்திலே தெளிவாகக் காட்டிவிடுகிறார்.

அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல் (203)

என்பது அவர் வாக்கு. இதனால் அறிவின் நிலையும் திறனும் வகையும் பிறவும் பலப்பலவாக அமையினும், அவற்றிற்கெல்லாம் தலையாய அறிவு, தமக்குத் தீங்கு செய்தவருக்கும் பதில் தீமை செய்யாததுடன் அவர்கள் செய்த கொடுமைகளையும் மறந்துவிடல் என்னும் உயரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/83&oldid=1356875" இலிருந்து மீள்விக்கப்பட்டது