பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தமிழர் வாழ்வு


பண்பே ஆகும் என்ற உண்மையைத் தெளிவாகக் கூறிவிட்டார் வள்ளுவர். எனவே இத்தகைய நல்ல பண்பு இலாதவரை அறிவுடையார் எனல் வேண்டா என்பது அவர் கருத்து.

இல்லற நெறி கருதி இவ்வாறு பிறர் செய்த தீமையை மறந்து அவர்களுக்கு மாறு செய்யாத ஒன்றினை அறிவினுள் சிறந்த அறிவாகச் சுட்டுகிறார் வள்ளுவர். துறவறவியலில் அதனினும் ஒரு படி மேலே சென்று இன்னா செய்யாமை என்னும் அதிகாரத்தில்,

அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தங்நோய்போல் போற்றாக் கடை (315)

எனக் குறிக்கிறார். மேலே இல்லறவியலிலே செறுவார்க்கும் என்று உயர்திணையைச் சார்த்திச் சொன்ன வள்ளுவர், இங்கே அஃறிணையினையும் உட்படுத்திப் ‘பிறிதின்’ என்று கூறி விளக்குகிறார். எனவே எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் ஒத்து நோக்கி அவற்றிற்கு வரும் துன்பத்தினைத் தம் துன்பமாக எண்ணும் நல்லோரே அறிவுடையார் என்பது துணிவு. இதே துறவறத்தில் மெய்யுணர்தல் எனும் அதிகாரத்தில் வள்ளுவர் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (355) எனச் சுட்டிக் காட்டியுள்ளார். இது நாம் முன்னே அறிவுடைமை அதிகாரத்தில் சுட்டிய ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்’ என்ற குறளுக்கு ஒப்ப அமைகின்றதாயினும், முன் காட்டியது சொல்லால் காணும் திறனைக் குறிக்க, இது அப்பொருளின் முழுத் தன்மையினையும் காணும் திறனாக அமைகின்றது. இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கின்றபோது, வள்ளுவர் ‘கற்றனைத் தூறும் அறிவு’ என்று கூறினாராயினும் அது ஒன்றை மட்டும் அறிவாகக் கொள்ளவில்லை என்பதும் அக் கற்றலும் ‘கற்பவை’யாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/84&oldid=1357179" இலிருந்து மீள்விக்கப்பட்டது