பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. எது உரைநடை ?


உரைநடை என்பது என்ன? அதன் விளக்கம் யாது? உரைநடை என்பது தொடர் மொழி. உரை ஒரு சொல்; நடை ஒரு சொல். உரையானது நடந்து செல்லும் நெறியே உரைநடையாகின்றது. பல்வேறு சந்தங்களுக்கும் தாள அமைதிக்கும் ஏற்பப் பாவி நடக்கும் பாவினும் வேறுபடுத்த வேண்டி இதை உரைநடை என்று வழங்கினார்கள் எனக் - கொள்ளுதல் பொருத்தமானதாகும். உரை' என்னும் சொல் தமிழில் நெடுங்காலமாகவே வழக்கத்தில் இருந்து வருகின்றது. உரை என்பது எழுத்துக்கள் வரிவடிவாய் அமைந்து ஒலி வடிவாய் அவற்றின் தன்மையை விளக்க வருவது என்றுதான் பலரும் பொருள் கொள்கின்றனர். உரைக்கப்படுவதால் உரையாயிற்று என்பர். அதாவது, வாயினால் ஒன்றைப் பற்றிப் பொருள் தோன்ற உரைப்பதே உரை எனக் கொண்டனர் எனலாம். எனினும், வெற்றொலியை இச்சொல் குறித்த காலமும் ஒன்று உண்டு போலும்! உரை என்பது வெறும் முழக்கத்துக்கும் வழங்கிய ஒரு சொல் எனக் காண்கிறோம். மேகங்கள் மலையுச்சியில் சூழ்ந்து இடித்துப் பேரொலி எழுப்புவதை இன்றும் கேட்கின்றோம். அந்தப் பேரொலியாகிய முழக்கத்தையும் பழங்காலத்தில் உரை என்றே வழங்கினார்கள். ‘குன்றம் குமுறிய உரை’ என்பது பரிபாடல் அடி.[1] எனவே, அக்காலத்தில் ஒலியும் முழக்கமும் உரையாகப் பேசப்பட்டன என அறிகிறோம்.

‘உரைக்கப்படுபவைவெல்லாம் உரையாயின், பாட்டும் வாய்திறந்து உரைக்கப்படுவதுதானே? அதையும் கொள்ள

  1. பரிபாடல் 8 : 35
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/86&oldid=1357207" இலிருந்து மீள்விக்கப்பட்டது