பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எது உரைநடை ?

85


லாமோ?’ எனின் அவ்வாறு வழக்காறு இன்மையின், கொள்ளுதல் பொருத்தமாகாது என்று முடிவு. செய்தல் வேண்டும். சிலப்பதிகாரத்தை ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்று கூறுவதும் அது பற்றியேயாம். உரை, பாட்டிலும் வேறுபட்டது என்பதை இத்தொடர் நன்கு விளக்குகின்றதன்றோ? இனி உரை பாட்டிலும் வேறுபட்டதாயினும், அதையும் செய்யுளில் அடக்கலாம் என்பர் சிலர். அவர்தம் கருத்துக்கு ஏற்பவே ஆசிரியர் தொல்காப்பியரும் உரையினைச் செய்யுளினுள் அமைத்துள்ளமை நோக்கற்பாலது. செய்யப்படுவன வெல்லாம் செய்யுள். எனவே பாட்டாகச் செய்யப்படுவன பாட்டுச் செய்யுளானபடி, உரையால் செய்யப்படுவன வெல்லாம் உரைநடைச் செய்யுள் என்று கொள்ளல் பொருந்தும். சொற்குப் பொருள் கூறும் நூல்கள் ‘செய்யுள்’ என்னும் சொல்லுக்குப் பாட்டு, காவியம், உரை என்ற மூவகைப் பொருள்களும் உண்மையைக் குறிக்கின்றன.[1] உரைச் செய்யுள் (Prose Composition). என்னும் ஒரு பகுதியே உள்ளதாகச் சென்னைப் பல்கலைக் கழக அகராதி.[2] குறிக்கின்றது. எனவே, உரையும். ஒருவகைச் செய்யுள் தொகுதி எனக் கொள்ளலாம்.

உரை என்பது பொருளின் தன்மையை உள்ளவாறு உரைப்பதாகும். இதை விளக்க ஒரு சான்று பயன்படும். தட்டான் பொன்னுக்கு உரை காணும் வழக்கம் பல கட்டுப்பாடுகளுக்கிடையில், நம் நாட்டில் இன்னும் உள்ளதை அறிவோம். பொன் சிறந்ததா இல்லையா என்பதை – அதன் உண்மை நிலை, பண்பு, தரம் முதலியன இன்ன வகையன என்பதை – உரைத்துக் காண்பது. நாடறிந்த ஒன்று. அதன் தன்மையை உணர்த்தும் கல்லுக்கு ‘உரை கல்’ என்றே பெயர் உண்டு அல்லவா? எனவே பொருள்களின் இயல்பை உள்ளது உள்ளவாறே.

  1. Tamil Lexicon, Vol. Ill, P. 1602
  2. Tamil Lexicon. Vol. I, P. 452
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/87&oldid=1358550" இலிருந்து மீள்விக்கப்பட்டது