பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

தமிழர் வாழ்வு


உலகுக்கு உணர்த்துவது உரையாகும். இதைத்தான் ‘அடிப்படை மொழி’ என்பர் ஆய்வாளர். கற்பனை கலவாததாய் – உணர்ச்சியோ, பிற உள்ள நெகிழ்ச்சி களோ, காய்தல் உவத்தல் என்ற வேறுபாடுகளோ – கலவாததாய் – ஒரு பொருளின் தன்மையை உரையிட்டு உணரத்தக்க வகையில் காட்டுவதே உரை. (தட்டான் பொன்னை உரையிட்டுக் காட்டுவது போன்று) ஆனால் பாட்டோ இதற்கு நேர்மாறாக உணர்ச்சி, கற்பனை முதலியவற்றின் இடையிலே தோய்ந்து அணிநலம் முதலியன பெற்றுப் பாடுவோன் உள்ளத்தளவு உயர்வோ அன்றித் தாழ்வோ பொருந்தப் பொருளை விளக்குவதாகும். இந்த உண்மையை மேலை நாட்டு அறிஞர்கள் நன்கு விளக்கியுள்ளார்கள். மொழி, இலக்கியம் இரண்டையும் வரையறுத்த ஆய்வாளர் எண்ணத்தை உணர்த்துவது மொழி யென்றும் உணர்வை உணர்த்துவது இலக்கியம் என்றும் கூறுவர்.[1]

இவ்வாறு எழுத்துக்கு வரிவடிவம் கொடுக்கும் நிலையிலேயே ‘உரை’ உண்டாகியிருக்க வேண்டும் என்பது உண்மையன்றோ உள்ளத்துத் தோன்றிய எண்ணத்தை மற்றவருக்கு உணர்த்த நினைத்த மனிதன் எண்ணி எண்ணி எழுத்தெழுத்தாக உச்சரித்து, சொல்லின் பின் சொல்லாக மெல்ல உரைத்திருப்பானன்றோ? எனவே முதலில் தோன்றியது உரை எனக்கொள்ளல் பொருத்தமானதாகும்.

பாட்டுக்கு அமைந்த இலக்கண வரம்பின்றி, மக்களால் எளிமையாக ஒளிவுமறைவு இன்றி எழுதவும் பேசவும் பயன்படும் ஒன்றே உரைநடையாகும். செய்யுளிலிருந்து உரை நடையைப் பிரித்துக் காட்டுவது எளிதாயினும் இன்னும் திட்டமாக இரண்டையும் வரையறுக்க இயலாது. ஏனெனில் உயர்ந்தநடையில் செய்யுள் இலக்கணத்தோடு கலவாமலே நல்ல ஓசை நயத்துடன் எழுதும் உரைநடையை

  1. Winchester, P. 182
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/88&oldid=1358306" இலிருந்து மீள்விக்கப்பட்டது