பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எது உரைநடை ?

87


‘உரைப்பாட்டு’ என்று சொல்வதும் உண்டு. எனவே, செய்யுளிலிருந்து உரைநடையைப் பிரித்துக் காண்பதை விட்டு உரைநடை என்பதை உள்ளவாறு விளக்க முயலலாம். உரைநடை, என்பது, இலக்கிய மரபு கெடாத நல்ல நடையில், ஆழ்ந்த கருத்தோடு, செய்யுள் சந்தச் சேர்க்கை இன்றியே நல்ல ஓசை நயம் உடையதாகி, ஒளிவுமறைவு இன்றி உள்ளபடி உரை இட்டுக் காட்டும் வகையிலே நேரிய முறையில், கருத்துக்கும் காரணத்துக்கும் பொருத்தமானதாக (ஒன்றனைப் பற்றியோ, ஒருவனைப் பற்றியோ) விளக்கி உரைப்பதாகும்.

கட்டுக்கடங்காது பேசும் அல்லது எழுதும் சாதாரண எல்லா வசனங்களையும் உரை நடையாகக் கொள்வதாகாது. உரைநடை வாக்கியங்கள் இழுமென் மொழியால் நல்ல ஒழுகிசை நடையால், தொடர் நலமுடன் ஓசை உணர்த்தும் நெறியான், நன்கு வளர்ச்சியுற்ற தெள்ளிய நடையில் தெளிந்து செல்லுவனவாக அமைய வேண்டும். மொழிக்கு இன்றியமையாத பெயர் வினைகளுடன் சேரும் உரிச்சொற்களின் தகுதியும் அளவறிந்து அவற்றைச் சேர்த்து வழங்கும் முறையும் உரைநடையில் வரையறை செய்யப்பெறல் வேண்டும். தேவையற்ற சிலவற்றை விட்டொழித்தலும் உரைநடைக்கு இன்றியமையாதது. எனவே, உரைநடை என்பது செய்யுள் விதிகளுக்கு விலக்காய் நின்று இலக்கிய நலம் கெடா வகையில் மக்கள் உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை உலகுக்கு எடுத்துக்காட்டப் பயன்படுவது என்று கொள்ளல் பொருத்தும்.[1]

உலக இலக்கிய வழக்கியல் அகராதி[2] உரைநடை என்பது சாதாரண சொற்கள் கொண்டு எளிமையில்

  1. En. Britanica. Vgl. 18, PP. 591 and 592
  2. Dictionary óf wofid Literary Terms, P. 312.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/89&oldid=1358551" இலிருந்து மீள்விக்கப்பட்டது