பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தமிழர் வாழ்வு


உரைப்பதென்றும், பாட்டு என்பது அதனினும் வேறுபட்டு எளிமையிலும் மாறுபட்டதென்றும் காட்டுகின்றது. இவ்வுரைநடை தமிழ்நாட்டிலும் தொல்காப்பியர் கால முதல் இருந்தது என்றாலும், அது எந்த வகையில் இயங்கிற்று என்பதை நாம் காண முடியவில்லை. என்றாலும், மேலை நாடுகளில் மிகவும் பழங்காலத்திலிருந்தே உரைநடை தோன்றி வளர்ந்தது என்பதை. அறிஞர் நன்கு காட்டுகின்றனர். மேலை நாட்டு மொழிகளில் மிக்க பழமை வாய்ந்த கிரேக்க, இலத்தின் மொழிகளில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே உரைநடை வழக்கத்தில் இருந்தது என அறிகின்றோம். கிரேக்க மொழியில் கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே உரைநடை இலக்கியம் இருந்ததாம்.[1] இலத்தீன் மொழியிலும் அவ்வாறே மிகவும் பழங்காலத்தில் (கி. மு. 70 அல்லது 80) உரைநடை இலக்கியம் இருந்தது எனக் காட்டுகின்றனர். அக்காலத்தில் உரைநடை கண்டவர் சிசரோ.[2] என்பவர்.[3] என்றாலும், ஆங்கில, ஜெர்மன் நாடுகளில் கி.பி. ஒன்பதாம். நூற்றாண்டிலேதான் உரைநடைகள் தோன்றி வளர்ச்சியுற்றன என்பர். கி. பி. 387இல் ஆப்பாட் என்பார் ஆங்கிலத்தில் உரைநடை எழுதினார். ஜெர்மன் மொழியில் கி.பி 842இல் (The Age of Charlemagne) உரைநடை தோன்றிற்று.[4]


கதை வாயிலாக உரைநடையைக் காணும் ஹட்ஸன் அவர்கள் உரைநடையைப் பற்றி அதிகம் கூறவில்லை. என்றாலும், இரண்டொரு கருத்துகளைத் தெளித்துச் சென்றிருக்கிறார். உரைநடையையும் நாடகத்தையும் ஒப்பிட்டுக் காட்டி, உரைநடை மிக எளிமையானது.

  1. En. Britanica, Vol. 12. P. 593
  2. CICERO
  3. En. Britanica, Vol. 12 P. 598
  4. En. Britanica, Vol. 18. P. 598
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/90&oldid=1358319" இலிருந்து மீள்விக்கப்பட்டது