பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது உரைநடை ?

89


என்கிறார்.[1] உரைநடைக் கதை நூல்கள் சிறியன வாயினும் பெரியனவாயினும், அமைப்பு, பாத்திரங்கள் நிலை, அவற்றின் பேச்சு முறை, செயலாற்றலின் காலமும் இடமும் கடந்த நிலை, நடைப்போக்கு, வாழ்க்கைக்குத் தேவையானவற்றின் உண்மையை உணர்த்தும் தன்மை ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டவையாக இருக்கவேண்டும் என்கின்றார்.[2] இவ்வாறு உரைநடை நூல்கள் – நாடகமாயினும், கதையாயினும், கட்டுரையாயினும், வெறுஞ் சொற்களால் ஆக்கப்பட்டுப் பொருளற்ற முறையிலே செல்லாதனவாக மக்கள் வாழ்வுக்கு ஏற்ற வகையிலே நல்ல பொருள் பொதிந்தனவாக, இனிமையும் எளிமையும் உடையனவாக, செம்மை நடையில் செல்வனவாக அமைய வேண்டும் என்ற் உண்மையை அவர் மட்டுமன்றி வேறு மேலை நாட்டு அறிஞர் பலரும் வற்புறுத்தியுள்ளனர்.

தமிழ் இலக்கியத்தில் இவ்வுரைநடை முன்தோன்ற நெடுங்காலத்துக்குப்பின் இவ்வுரைநடை போன்று அமைந்த சூத்திரங்கள் – நூற்பாக்கள் – தோன்றின. பின்னரே பாட்டுத் தோன்றிற்றுஎனல் பொருந்தும். பொதுவாகச் சூத்திரங்கள் உண்டான காலம் கிறித்துப் பிறப்பதற்கு ஐந்தாறு நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது என்பர் ஆய்வாளர்.[3] வடமொழிச் சூத்திரங்களும் ஏறக்குறைய அந்த நூற்றாண்டுகளில்தான் தோன்றியிருக்க வேண்டும். எனவே உரைநடையை ஆடுத்து இச்சூத்திரங்கள் தோன்றி

  1. An Introduction to the Study of Literature, P: 130.
  2. ibid. 131
  3. The General Period of Sutras (Gäägth) extends from the sixth or Seventh Century B. C. to about the Second Century B. C. (Cambridge History of India—Vol. I. P. 227)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/91&oldid=1358322" இலிருந்து மீள்விக்கப்பட்டது