பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

தமிழர் வாழ்வு


யிருக்க வேண்டும்.[1] தொல்காப்பியமும் ஏறக்குறைய இக்காலத்திற்குச் சற்றுமுன்பு தோன்றிய ஒன்று என்பது அறிஞர் பலரும் ஒருசேர ஏற்றுக்கொள்ளுகின்ற உண்மையாகும். இனி, இத்தொல்காப்பியத்தின் செய்யுளியலில் உரையும் பாட்டும் உள்ள நிலைமை நம்மால் காண முடிகின்றது. மற்றும் இத்தொல்காப்பியத்தின் வழியே இதற்கு முன்னும் பல இலக்கிய நூல்கள் தோன்றி வாழந்து வந்தன என்பதையும் உணரமுடிகின்றது. தமிழ் மொழியின் தொன்மை பல பேரறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப் பெற்ற ஒன்றானமையால், இந்நாட்டுப் பிறமொழிகளைக் காட்டிலும் தமிழில் பழங்காலத்திலேயே உரையும், சூத்திரமும், பாட்டும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி வளர்ந்து வாழ, அவற்றைத் தொல்காப்பியர் தொகுத்துக் கூறி இலக்கண வரம்பினை உறுதி செய்தார் எனக் கொள்வது பொருத்தமானதாகும். எனவே உரைநடை பாட்டிலும் முந்தியது என்பது தேற்றம்.

மேலை நாட்டுப் பேரறிஞர்கள் தற்கால உரைநடை நூல்களை மூவகையாகப் பிரிக்கின்றார். அவை அனைத்தும் சிறப்பாக உரைநடை இலக்கியங்களாகவே அமைகின்றன. வருணனை உரை,[2] விளக்கவுரை,[3] உணர்ச்சி உரை,[4] என்னும் மூன்று வகைகளே அவர் காட்ட விரும்புவன. ஒரு செயலையோ, ஒரு பொருளையோ, ஒரு மனிதனையோ

  1. The Principle ‘Dharmasutra'can hardly be dated from later than about 500 B. C. (History of Ancient India-By Prof. Tripathi in ‘A History of Sanskrit Litsrature P. 260).
  2. Descriptive Prose
  3. Explanatory Prose
  4. Emotive Prose.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/92&oldid=1358327" இலிருந்து மீள்விக்கப்பட்டது