பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

தமிழர் வாழ்வு


‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனப் போற்றப்பெற்ற சிலப்பதிகாரத்தில் உரை நன்கு போற்றப் பெறுகிறது என்றாலும், அடுத்த சில நூற்றாண்டுகளில், தமிழில் உரைநடை வழக்குப் பற்றிய விளக்கம் கிடைக்கவில்லை. எட்டாம் நூற்றாண்டினை ஒட்டிய ‘இறையனார் களவியல் உரை’யே நமக்குச் சிறந்த உரையாகக் கிடைக்கிறது. அது பாட்டினும் கடு நடை உடையதாக உயர்தரத்ததாக உள்ளமை அறிவோம்.

அடுத்து, தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களுக்கும் பத்துப்பாட்டுபோன்ற இலக்கியநூல்களுக்கும் உரை கண்ட உரையாசிரியர்கள் தமிழ் உரைநடையினை வளர்த்தார்கள் எனலாம். பின் தொடர்ந்து உரைநடை தமிழில் வளர்ந்த தாயினும் இடையில் பலப்பல வேறுபாடுகளைப் பெற்றது.

இடைக்காலத்தில் ‘மணிப்பிரவாளம்’ என்ற வடமொழி பெரிதும் விரவிய உரை எழுதப்பெற்றது. நாலாயிரப் பிரபந்த உரை அந்த வகையினதே. எனினும் அம் முறை இயற்கைக்கு மாறுபட்டமையின் அது வழக் கொழிந்தது. பிற்காலத்தில் பல நூல்களுக்கு உரைகளும் பல இலக்கியங்களுக்கு உரைநடை அமைப்பும் உண்டாயின. இடைக்காலக் கல்வெட்டுக்களும் உரைநடையை வளர்த்தன.

மேலைநாட்டவர் தமிழகத்துக்கு வந்தபோது உரை தடையில் ஒரு திருப்பம், ஏற்பட்டது. பல உரைநடை நூல்கள் எழுதப்பெற்றன. விவிலிய நூல் உரைநடையில் மொழிபெயர்க்கப் பெற்றது. நாவல், நாட்குறிப்பு, சிறுகதை போன்றவை தோன்றின சென்ற நூற்றாண்டில் அரசாங்கப் பதிவேடுகளும், நாளிதழ் சிலவும் பிற் கடிதப் போக்குவரத்துக்களும் தமிழ் உரைநடையில் அமைந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/94&oldid=1358331" இலிருந்து மீள்விக்கப்பட்டது