பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எது உரைநடை ?

93


இந்த இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை மிகவும் வளர்ந்துள்ளது எனலாம். இதழ்கள், மலர்கள், நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் மிகவும் மலிந்து உரைநடையில் வந்தன. அவற்றுள் சில வட மொழி அன்றி வந்த சில வேற்று மொழிகளை இடையிடை கலந்தன வாயினமையின் அவை வழக்கற்றுப் போகும் தன்மையிலே உள்ளன. நாம் முதலிலே கண்ட அமைப்பில் உள்ள தெள்ளிய, இனிய, பொருள் உரைக்கும் தமிழ் உரைநடையே – அதன்வழி வரும் உரைநடை நூல்களே காலத்தை வென்று வாழும் என்பது உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/95&oldid=1367532" இலிருந்து மீள்விக்கப்பட்டது