பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. அரசியலும் வரலாறும்


6. உலக நாடுகளில் தமிழர்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் ஆரம்பித்த நாள் முதல் கூட்டத்தின்போது இன்றுதான் முதல்முதல் மழை பெய்து கொண்டிருக்கின்றது என்றார் திரு. பழநியாண்டி, நான் முதலில் தமிழ்நாட்டைக் கடந்து ஜெனிவா சென்றதும் மழையில்தான் தரை இறங்கினேன். பின், பாரிசிலும் தொடர்ந்து நான்கு நாட்கள் மழை பெய்து, வெளியே செல்ல முடியாமல் இருந்தது. பின் இலண்டனில் மழையிலேதான் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்க நேர்ந்தது. அதுபோல அமெரிக்கா சென்றபோதும் மழையே. ஹாங்காங்கிலும் மழையிலேயே நனைந்து சென்றேன். ஆகவே, இறைவன் என் பயணத்தின்போது என் கூடவே கருணைமழையை அனுப்பிக்கொண்டிருந்தார் என்று நம்பி, அவரை நாள்தோறும் வழிபட்டு வருகின்றேன். எனவே இன்று மழை பெய்ததைப் பற்றி எனக்கு வியப்பில்லை.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்கள், நான் சென்ற பயணக் குறிப்புக்களை வைத்து சில கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அவற்றில் சிலவற்றை இங்குக் கூற விரும்புகின்றேன். அயல் நாடுகளில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குப் பிரெஞ்சு மொழியை ஒட்டியும், ஆங்கில மொழியை ஒட்டியும் வகையான நல்ல தமிழ்ப் பாடங்களைத் தயாரிக்கலாம். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலச் செய்தி மடல்களையும் தமிழ் வெளியீடுகளையும் அங்கு அனுப்புதல் வேண்டும். தமிழ்க் கலாச்சரம் பற்றிய முனைவர் நம்பியாரூரன் தயாரித்துள்ள குறிப்புக்களை அச்சிட்டு அனுப்ப ஏற்பாடு செய்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/96&oldid=1358335" இலிருந்து மீள்விக்கப்பட்டது