பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உலக நாடுகளில் தமிழர்

95


வேண்டும். தமிழ்ப் பல்கலைக் கழக நூற்பட்டியலை மேலை நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் அனுப்புதல் வேண்டும். கற்பிக்க வேண்டிய பாடங்களை ஒலிப்பதிவுஒளிப்பதிவு செய்து நாடாக்களின் மூலம் அனுப்ப இயலும் என்னும் செய்தியைத் தெரிவிக்கலாம். இவற்றைப் பற்றி நான் உங்களுக்குக் கூறும் காரணம், தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வழியேதான் நான் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டேன் என்பதே.

அமெரிக்க நாட்டிலே ஏழு பல்கலைக் கழகங்களில் தமிழ் உள்ளது. தென்கோடியிலிருக்கிற டெக்சஸ் (Texas) பல்கலைக் கழகம் தவிர, மற்ற ஆறு பல்கலைக் கழகங்களுக்கும் சென்றுவந்தேன். அவர்களில் சிலர் அழைப்பு, அனுப்ப, அங்கு நடைபெறுகின்ற பணிகளையெல்லாம். கண்டுவர வ்ேண்டும் என்று சொன்ன காரணத்தினால் தான் சென்று வந்தேன். செல்லும்போது நடுவில் ஐரோப்பிய நாடுகள் நான்கில் தங்கினேன். பின், திரும்பும் போது ஜப்பானுக்கும் சென்றேன். ஜப்பானில் தமிழ் இல்லாவிட்டாலும் தமிழைப் பற்றிய பல செய்திகள் காணப்படுகின்றன. ஹாங்காங்கிற்கும் சிங்கப்பூர். நகருக்கும் சென்றுவந்தேன். மலேயாவிலிருந்தும் அழைப்பு அனுப்பியிருந்தார்கள். ஐரோப்பிய நாடுகளிலேயே நர்ன் முதலில் சென்ற நாடு சுவிட்சர்லாந்து. அங்கு நாட்டு மொழிகள் மூன்று. அங்கே தமிழ் இல்லாவிட்டாலும் ஜெனிவா பல்கலைக் கழகத்தில்-பல்கலைக் கழகத்தின் புறத்தே உள்ள பொருட்காட்சிகளில் எல்லாம் தமிழ்ர்களின் நாகரிகம் பற்றிய குறிப்புகள் பல உள்ளன. பொருட்காட்சியிலே மனித வளர்ச்சி பற்றியும், நிலவளர்ச்சி பற்றியும், மறைந்த லெமுரியா பற்றியும், மொகஞ்சோதாரா என்னும் இடத்தைப் பற்றியும் பல குறிப்புகள் காணப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/97&oldid=1358339" இலிருந்து மீள்விக்கப்பட்டது