பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சிறப்பு D— 125 உரைநடை இலக்கியங்கள்

தமிழ் இலக்கியங்களில் உரைநடை இலக்கியங்கள் என்பது ஒரு பிரிவு. பண்டைக் கால இலக்கியங்கள் அனைத்தும் கவிதை இலக்கியங்களாகவே அமைந்தவை. தமிழில் உரைநடை இலக்கியங்கள். மிக அண்மைக் காலத்தில்தான் தோன்றின.

அவை நாவல், புதினம், சிறுகதை, பெருங்கதை, கட்டுரைக்கோவை முதலியன. இத்துறையில் இன்றுள்ள இளம் எழுத்தாளர்கள் பலர் முயன்று எழுதி வெற்றிபெற்று வருகின்றனர்.

உரைநடை நூல்கள் அனைத்தும் பிறமொழிச் சொற்கள் கலவாத தனித்தமிழ் நடையில் அமைய வேண்டும் என்பது நல்லறிஞர்களின் கருத்து. அத்துறையில் நமக்கு வழிகாட்டியவர் மறைமலை அடிகளும், திரு.வி.கலியாணசுந்தரனாரும் மட்டுமே. அவ் வழியை முழுதும் பின்பற்றி உரைநடை இலக்கியங்களை எழுதி வெற்றி பெற்றவர்களில் தலைசிறந்தவர் உயர்திரு டாக்டர் மு.வரதராசனார் அவர்கள். இன்று இவர்களைப் பின்பற்றி எழுதும் எழுத்தாளர்கள் பலர் தோன்றித் தமிழ் இலக்கியங்களை வளர்த்து வருகின்றனர். இது மட்டுமல்ல;பேச்சு இலக்கியங்கள் எனவும் சில உண்டு. இவை உள்ளத்தை மகிழ்விப்பவை. பெரும்பாலும் நகைச்சுவையையே அடிப்படையாக கொண்டவை. -

ஆகவே, தமிழ் இலக்கியங்கள் கவிதை, உரைநடை பேச்சு ஆகிய மூவகையிலும் சிறந்தவை. என்னே தமிழ் - இலக்கியங்களின் சிறப்பு -