பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. இலக்கணச் சிறப்பு

இலக்கணம் என்பது சட்டம், வரம்பு, ஒழுங்கு, அமைப்பு, அமைதி, அழகு எனப் பொருள்பெரும். இதை வடமொழியில், "அழகு" என்ற பொருளில் இலட்சணம்' எனக் கூறுவதும் உண்டு.

அகத்தியம் - இது ஒரு சிறந்த இலக்கண நூல். இதைப் 'பேரகத்தியம்'

எனவும் கூறுவர். முதற்சங்கத்திற்கும் இடைச்சங்கத்திற்கும் இதுவே இலக்கண நூலாக இருந்து வந்தது எனவும். அது மிகவும் விரிவான நூல் எனவும், அதில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, சந்தம், வாழ்த்தியல், அரசியல் அமைச்சியல் முதலியன கூறப்பெற் றிருந்தன எனவும் தெரியவருகிறது. இந்நூல் இப்பொழுது இல்லை. இந் நூலின் சில நூற்பாக்கள் தொல்காப்பியம் இளம் பூரணர்உரையிலும், இலக்கணவிளக்க உரையிலும், இலக்கணக் களஞ்சியத்திலும் காணப் பெறுகின்றன. இந்நூலின் காலம் 7000, 9000 ஆண்டுகள் எனக் கூறப்பெற்றாலும், 5000 ஆண்டுகளுக் குப் பிற்பட்டதல்ல என உறுதியாகக் கூறலாம். இதனைச் செய்து உதவியவர்தமிழ்ச் சான்றோர்களில் ஒருவராகிய அகத்தியர். உலக மொழிகளில் முதல் முதலாக இலக்கணம் பெற்ற பெருமை தமிழுக்கும், அதைக் கண்ட பெருமை இவருக்கும் உண்டு.

தொல்காப்பியம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் நூல்களில் இன்று

நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாக உள்ள நூல் தொல்காப்பியம் ஒன்றே. இதில் எழுத்து, சொல், பொருள், யாப்பு,