பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன- )ー127

அணி ஆகிய ஐந்திற்கும் இலக்கணம் விரித்து உரைக்கப் பெற்றிருக்கிறது. இதுபோன்ற தொரு இலக்கணத்தை, உலக மொழிகளில் எதுவும் அன்று பெறவில்லை என்பது மட்டுமல்ல, இன்றும் பெறவில்லை. யவன நாட்டு அரித்தாட்டில் நூல்களுக்கும், ஆரிய நாட்டுப் பாணியின் நூல்களுக்கும் முன்னமேயே தொல்காப்பியர் நூலில் செறிவும், செப்பமும், வரம்பும், எழிலும் நிறைந்து காணப்பெற்றன. எபிரேயம், பாரசீகம், சீனம் போன்ற பழைய மொழி நூல்களில் காண முடியாத பல சிறப்பியல்கள் தொல்காப்பியத்திற் காணப் பெறுகின்றன.

பழைய இலக்கணங்கள் தொல்காப்பியத்திற்கு முன்னும், அகத்தியத்திற்குப் பின்னும், தமிழில் பல இலக்கண நூல்கள் இருந்திருக்கின்றன். இவ்வுண்மையை “என்ப', 'என்மானர் புலவர்' 'யாப்பென மொழிய யாப்பறி புலவர்", "தோலென மொழிப் தொன்மொழிப் புலவர்' எனத் தொல்காப்பியத்திற் காணப் பெறுவதாலேயே நன்கறியலாம். இந்நூல்களின் காலம் ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளாகும். அவற்றில் எதுவும் இன்றில்லை. ,

பிற்பட்ட இலக்கண நூல்கள் இறையனார் அகப்பொருள், பன்னிரு படலம், வெண்பாப் பாட்டியல், வெண்பாமாலை, யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, அகப்பொருள் விளக்கம், இலக்கண விளக்கம், தொல்காப்பிய விருத்தி, முதற் சூத்திரவிருத்தி, நன்னூல், இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கச் சூறாவளி, தண்டியலங்காரம், விர சோழியம் முதலியன பிற்காலத் தமிழ் இலக்கண நூல்களில் தலைசிறந்தவிளங்குவன. இவ்ற்றில் சில, மிகப் பழைய இலக்கணங்களோடுவைத்து எண்ணத்தகுந்தவை.