பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 —C தமிழின் 95)

ஐம்பெரும் பிரிவு

தமிழ் இலக்கணம் ஐந்து பெரும் பிரிவுகளையுடையது; எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என இப்பிரிவுகளையும், இதன் உட்பிரிவுகளையும், உட்பிரிவின் உட்பிரிவுகளிலுள்ள கிளைகளையும், இலைகளையும் தன்னகத்தே கூறவேண்டு மானால், தமிழ் இலக்கணமானது வேர்முதல் விழுதுவரை எண்ணி வரையறுக்கப்பெற்ற "ஒரு பெரிய ஆலமரம்' என்றே கூறியாக வேண்டும்.

எழுதது

'அ, இ, உ, எ, ஒ என்ற ஐந்தெழுத்தும் தமிழின் உயிரெழுத்துக்கள் மட்டுமல்ல, உயிரின் உயிர் என்றே கூறவேண்டும். ஏனெனில் உலகில் பல மொழிகள் இந்த எழுத்துக் களை உயிரெழுத்துக்களாகக் கொண்டுள்ளன. ஆங்கிலத்திற்கூட இதே ஐந்தெழுத்துக்களைத்தான் உயிர் எழுத்துக்கள் எனக் கூறி A,E,I,O,U என்கின்றனர். "ஆ, ஈ, ஊ, ஏ, ஓ'இதன் நெடில் எழுத்துக்கள். ஆங்கிலத்திலும், இந்தியிலும் "எ, ஒ என்ற இரு உயிர்களும் அடியோடு இல்லை. அதற்கு மாறாக “ஏ, ‘ஓ’ என்ற இரண்டு நெடில்கள் மட்டுமே உள்ளன. இவை தமிழ் எழுத்துக்களின் சிறப்பைப் பின்னும் உயர்த்திக் காட்டுகின்றன.

இன எழுத்துக்கள் ஒரு எழுத்துக்கு மற்றொரு எழுத்து இனம் என்பதை எழுத்திலும், தமிழ் இலக்கணத்திலும் தான் காணமுடியும். க-வுக்கு 'ங்' அதாவது 'ங்' வந்த பிறகு இதன் இனமாகிய "க" தான் வரும் சங்கு, இங்கு, எங்கு, கங்ங்ணம், மங்கலம், அங்ங்ண்ம் என வருவன

காண்க; இது G ஒலி.