பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 —C தமிழின் சிறப்)

மூன்றவாது ன-கரத்தை றன்னகரம் எனவும் இலக்கணம் கூறும்.

இப்படி ஒரு எழுத்திலக்கணத்தை எந்த மொழியிலாவது காண முடியுமா? ஆராய்ந்து பாருங்கள்.

‘‘g, உம், "இ"யும் உயிரெழுத்துகளுக்கு ஒரு மாத்திரை அளவு ஓசையுண்டு என முன் அறிந்தோம். ஆனாலும், உ-கரமும் இ-கரமும் சிலவிடங்களில் குறைவான ஓசையோடுஒலிக்கும். அவற்றிற்குக் "குற்றியலுகரம்' எனவும், "குற்றியலிகரம்' எனவும் பெயர்.

அக் குற்றியலுகரம், நெடிற்றொடர்க் குற்றியலுகரம், ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம், வன்றொடர்க் குற்றியலுகரம், மென்றொடர்க் குற்றிலுகரம், இடைத் தொடர்க் குற்றிலுகரம் என ஆறு வகைப்படும். இக் குற்றிலுகரங்கள் கடைசி யெழுத்தாகிய தன்னைத் தொடர்கின்ற அயல் எழுத்துகளின் வகைகளினாலே அமையும். குற்றிய லிகரமும் இவ்வாறே அம்ையும்.

அளபெடை

உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் தமக்குள்ள அளவைவிடச் சிலபொழுது நீண்டொலிக்கும். அது பெரும்பான்மையாக அழைத்தல், அழுதல், புலம்பல், பாடுதல் ஆகிய நான்கிடத்திலும் வரும். அதுவே எழுத்திலும் கவிதையிலும் வரும்பொழுது, கூவினான் என்பது 'கூஉவினான் எனவும் ஊமை என்பது "ஊஉமை' எனவும், ஆடை என்பது 'ஆஅடை' எனவும் உ-வும்: அ-வும் ஆகிய உயிரொன்று ஏறி மூன்று மாத்திரை அளவு ஒலி