பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. எழுத்துச் சிறப்பு

& &

ழ’’

பிற மொழி எழுத்துக்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு தமிழ் எழுத்துக்களுக்கு உண்டு. அவற்றில் ஒன்று 'ழ' என்ற எழுத்து. 'ல 'ள்' என்ற இரு எழுத்துக்களோடு 'ழ'வும் நின்று. தமிழ் எழுத்துக்களுக்கே ஒரு தனிச் சிறப்பை அளித்து வருகிறது.

ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்க, சீன, ஜப்பானிய,

அரேபிய, உருது, வங்காள, குஜராத்திய, மராட்டிய, சமற்கிருதம்

போன்ற பழைய மொழிகளிலும், நேற்று வந்த இந்தி மொழியிலும்கூட'ழ' என்று ஒலிப்பதற்குரிய எழுத்து இல்லை.

உலகில் எந்த மொழியிலும் இல்லாத ஒரு சிறப்பு எழுத்து தமிழ்மொழியில் மட்டுமே இருந்து தமிழைச் சிறப்பித்து வருவதால், இது 'சிறப்பு ழகரம்' எனக் குறிப்பிடப்பெற்று வருகிறது.

தமிழ் நடையில் "பாதிரித் தமிழ்' என்றும் ஒரு நடை உண்டு. அது 'பிறியமானவர்கலே நான் உங்கலைக் கேட்டுக் கொல்லுவது என்னவென்றால்...' என்றிருக்கும். கொல்லுவது எனறு வந்த பிறகு கேட்டுக் கொல்லுவானேன்; கேளாமலேயே கொல்லலாமே என்று எண்ணத் தோன்றும், பாவம், அவர்களைக் குறை கூறிப் பயனில்லை. அவருக்கு “ள', 'ல', 'ழ' என்ற எழுத்துக்களின்