பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்துச் சிறப்பு 37

வேற்றுமை தெரியாது. இம் மூன்று எழுத்துக்களுக்கும் அவர்களிடம் “எல்’ என்ற ஒரே ஒரு எழுத்துத்தான் உண்டு. அந்த ஒன்றை வைத்தே இந்த மூன்று ஒலிகளையும் ஒலித்துத் தீர வேண்டிய நிலையில் இருந்து வருகிறார்கள்.

தமிழில் ஒரே சொற்றொடரில் இம் மூன்று எழுத்துக்களையும் காணலாம். இதற்கு எடுத்துக்காட்டாக, "மாலைப் பொழுதில் காளை வந்தது' என்பதைக் குறிப்பிடலாம். இதைப் பாதிரிமார்களில் சிலர் "மாலைப் பொழுதில் காலை வந்தது!" என்றே கூறுவர். "மாலையில் காலை எப்படி வரும்?' எனக் கேட்டால், அவர்களும் நம்மோடு சேர்ந்தே சிரித்து விடுவர்.

'தொழிலாளி என்ற ஒரே சொல்லில் இம் மூன்று எழுத்துக்களையும் காணலாம். அவர்களின் எழுத்துக்களைக் கொண்டு தொலிலாலி' என்றுதான் எழுதமுடியும். இதற்காக நாம் வருந்தாமல் அவர்கள் மீது இரக்கம் காட்டியே ஆகவேண்டும், காரணம், அவர்களிடம் இருப்பது ஒரே ஒரு "எல் மட்டுமே யாகும். அதை எண்ணும் பொழுது,

'ஆங்கிலம்

அழகான பாஷைதான், அதற்கேற்ற எழுத்துத்தான் அவர்கிட்ட இருப்பதெல்லாம் ஒரே ஒரு எல்லுதான்."

என்று பாடலாம் போலத் தோன்றுகிறது.

"தமிழிசை இயக்கம்' என்ற ஓர் இயக்கத்தைத் தமிழறிஞர்கள் சிலர் கூடித் தமிழகத்திலேயே நடத்தித் தீர வேண்டிய இழிநிலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டிருந்தது. அதுபோது, 'தமிழ் மக்கள் தமிழகத்தில் தமிழரிடையே நடத்தும் தமிழ்