பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எழுத்கர் சிறப்பு اسس – – سقنـسسسسسات )ー 39

கருவிகள் இல்லையே' எனக் கூறிக்கொண்டு வெளிவந்தது. இதைக் கண்டதும் 1800 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சிலப்பதிகாரத்தை எடுத்து முன் வைத்து சந்தனம், மூங்கில், வெண்கலம், சுருங்காலி, செங்காலி ஆகியவைகளால் செய்த துளைக் கருவிகளாகிய குழல்களை ஊதி, -

7 - நரம்புகளுடைய செங்கோட்டு யாழ் 16 நரம்புகளுடைய சகோடயாழ் 17 - நரம்புகளுடைய மகர யாழ் 21 நரம்புகளுடைய பேரியாழ்

ஆகிய நரம்புக் கருவிகளை எடுத்து மீட்டி,

'பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை

சீர்மிகு மத்தளம், சல்லிகை, கரடிகை, தொக்க உபாங்கம், துடி, பெரும்பறை'

என மிக்க நூலோர் விரித்துரைத்துக் காட்டிய தோற் கருவிகள் அனைத்தையும் கொட்டி முழக்கினோம். எதிர்ப்புச் சாகத் தொடங்கியது. - « , ,

செய்தி இவ்வளவோடு நின்றுவிடவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு கும்பகோணத்திலிருந்து எவனாவது ஒருவன் தோன்றி, "தமிழில் இசைக் கருவிகள் இல்லை' எனக் கூறுவான் என்பதை அன்றே அறிந்த தமிழன், "இந்த இசைக் கருவிகள் யாவும் தமிழகத்தில், தமிழனால் கண்டு பிடிக்கப் பெற்றவை என்பதை மெய்ப்பிக்க, அவற்றிற்குத் தமிழ் மொழி யிலேயே பெயரிட்டிருக்கிறான். அதுவும் தமிழுக்கே சிறப்பாக உள்ள சிறப்பு 'ழ'கரத்தை ஒவ்வொன்றிலும் புதிய வைத்து,