பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ( தமிழின் சிறப்பு)

தோற்கருவிக்கு 'முழவு' எனவும், துளைக் கருவிக்கு 'குழல்' எனவும், நரம்புக் கருவிக்கு 'யாழ்' எனவும்,

பெயரிட்டு, இவை அனைத்தும் தமிழனின் சொந்தச் சொத்து என்பதையும் அன்றே பதிவு செய்து வைத்திருக்கிறான்" எனவும் மழையும் புயலும் கலந்த இடி இடியென இடித்தோம். எதிர்ப்புச் செத்து மடிந்து, மண்ணோடுமண்ணாய்ப்போய் விட்டது. எப்படி, தமிழிசை இயக்கம் வெற்றி பெற இந்த 'ழ'கரம் செய்த உதவி!

தமிழ்ச் சொற்களைப் பல மொழிகள் கடன் வாங்கியிருக்கின்றன. வடமொழியில் 'பழம்" என்ற சொல்லே இல்லை. அதனால், அவர்கள் தமிழ்ச் சொல்லையே கையாண்டு வருகின்றனர்.சொல்லைக்கடன்வாங்கினாலும் எழுத்தைக்கடன் வாங்க முடியவில்லை. அவர்களிடம் "ழ இல்லாததால் 'സ' 5ാഖ வைத்தே'பலம்' என்கின்றனர். இவ்வுண்மையை, "கத லிபலம்" என்பதால் நன்கு அறியலாம்.

தமிழுக்கே சிறப்பாக உள்ள இச்சிறப்பு 'ழ'கரம் தமிழரிடையே படும் பாடுகளை எண்ண எண்ண, நமதுள்ளமெல்லாம் புண்ணாகி விடுகிறது.

தமிழகத்தின் தெற்கே உள்ள சிலர்'ழ' வை"ள வாக்கி, "ஐயா, கடைக்காரரே உம்மிடம் வாளப்பளம் உண்டுமோ?" என்று கேட்கின்றனர். கிழக்கே உள்ள சிலர் 'ழ' வை "ஷ', வாக்கி, மார்க்ஷித்திருவிழா என்கின்றனர். வடக்கே உள்ள சிலர்'ழ'வை "ஸ்" வாக்கி, "இஸ்துகினு போய்ட்டான்' எனக் கூறுகின்றனர்.