பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...~ - - - குழுத்துச் சிறப்பு —T 11

மேற்கே உள்ள சிலர் 'ழ' வை 'ய' வாக்கி 'வாயப்பயம் என்று கூறுகின்றனர்.

கோவைப் பக்கத்தில் ஒருவன் “வாயப்பயம்', 'வாயப் பயம்' என்று கூறிக்கொண்டே போனான். புண்பட்ட உள்ளத்தோடு அவனை அழைத்து, 'என்ன விற்கிறாய்?" என்றேன். 'வாயப்பயம்' என்றான் "நீ எந்த ஊர்?' என்றேன். 'கியக்க" என்றான். "இங்கே எதற்கு வந்தாய்?" என்றேன். "புயக்க' என்றான். எனக்குக் கடுங்கோபம் வந்து, 'ஏனப்பா தமிழை இப்படிக் கொலை பண்ணுகிறாய்?" என்று கேட்டேன். அதற்கு அவன் 'அது எங்க வயக்கங்க' என்றான். அவ்வளவுதான். அதற்குமேல் நான் அவனிடம் பேசவில்லை; போய் விட்டேன், எப்படி, தமிழுக்கே சிறப்பாக உள்ள 'ழ'கரம் தமிழரிடையே

படும்பாடு:

'தமிழ்' என்ற மொழிப் பெயரிலும், 'இந்த 'ழ' எழுத்து இருக்கிறது. 'பேசு' என்று ஏவுகிற மொழி" என்ற சொல்லிலும், இந்த 'ழ' எழுத்து இருக்கிறது. இது தம்மிடத்தில் 'ழ' வை உடைய மொழி தமிழ்"என்ற பொருளையும் காட்டி நம்மை மகிழ்விக்கிறது. இது காறுங் கூறியவைகளால் தமிழ் மொழியின் எழுத்துச் சிறப்புை ஒருவாறு அறியலாம்.