பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சொற் சிறப்பு

தமிழ் மொழிக்குள்ள சிறப்புகளில் 'சொற்சிறப்பு' என்பதும்

ஒன்று. இச் சிறப்பு ஒரு தனித்தன்மை வாய்த்தது. இதனைப் பிறமொழிகளில் காண இயலாது.

தமிழ்ச்சொற்களின் எண்ணிக்கைஏறத்தாழ 90,000 மட்டுமே. இதில் எந்தச் சொல்லும் ஏழெழுத்துக்கு உட்பட்டதே. தமிழில் 8 எழுத்துச் சொல்லைக் காண முடியாது. ஆங்கிலத்தில் 20, எழுத்துக்களுக்கு மேற்பட்ட சொற்கள் பலவற்றைக் காணலாம். 23 எழுத்துச் சொல்லும் உண்டு. அது "எக்சாமெதலனெட் டெட்ராமைன் என்பது. தமிழில் இத் தொல்லை இல்லை.

6,7 எழுத்துள்ள சொற்களும் மிகச் சில, 5 எழுத்துள்ள சொற்களும் சிலவே. 4-எழுத்தள்ள சொற்கள் பல. 3,2 - எழுத்துள்ள சொற்களே மிகப் பல. ஒரெழுத்து ஒருசொல் என்பதும் தமிழில் உண்டு, அவை: -

ஆ = பசு, கோ = மன்னன் நர் =நாக்கு தீ - நெருப்பு, பை - சாக்கு, மை = கருமை வா - வரவேற்றல், வை - ஏவுதல், போ = விரட்டுதல், ஈ = ஓர் உயிரி, கை = ஓர் உறுப்பு, பூ - மலர், தா = கொடு, மா = குதிரை,

கா - காத்தல், தை = ஒரு மாதம்,