பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(சொற் சிறப்பு ) 43

என்பன. இவை எழுத்தின் சுருக்கத்தையும் சொல்லின் பெருக்கத்தையும் மொழியின் வளத்தையும் ஒருங்கே காட்டுவனவாம். -

பிற மொழிச் சொற்கள் உருவத்தை மட்டுமே காட்டுவன. தமிழ்மொழிச் சொற்கள் உருவத்தையும், பருவத்தையும் சேர்த்துக் காட்டக் கூடியன.

பெண் ஆங்கிலேயர் உமென் என்பர். வடமொழியினர் “ஸ்திரீ என்பர். இவை இரண்டும் உருவத்தை மட்டுமே காட்டுகின்றன; பருவத்தைக் காட்டவில்லை. காட்ட வேண்டுமானால், 'யங், 'ஓல்டு' என்பதையோ, 'பால்ய, வயோதிக" என்பதையோ சேர்த்துக் கூறியாக வேண்டும். இவை அம் மொழிகளின் சொற்சிறப்பைக் காட்டுவதாக இல்லை. தமிழிலுள்ள சொற்கள் உருவத்தோடு அதன் பருவத்தையும் காட்டுவதைக் கண்டு மகிழுங்கள்.

பேதை பெண் 5 வயதுக்கும் கீழ் பெதும்மை பெண் 10 வயதுக்கும் கீழ் மங்கை பெண் 16 வயதுக்கும் கீழ் மடந்தை பெண் 25 வயதுக்கும் கீழ் அரிவை பெண் 30 வயதுக்கும் கீழ் தெரிவை பெண் 35 வயதுக்கும் கீழ் பேரிளம் பெண் பெண் 45 வயதுக்கும் கீழ்,

பெண் என்ன? ஆண் என்பதைத்தான் பாருங்கள்.