பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலிச் s - —T 49

6 - ய்,ர்,ல்,வ், ழ்,ள் இவற்றை வலிந்தும், மெலிந்தும் இடையிலும் ஒலிக்க வேண்டும் என மூன்று வகையாகப் பிரித்து, அவற்றை மூன்று இனமாக்கி, அவற்றிற்கு வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பெயரிட்டிருப்பது ஒரு வியப்பு. அதைவிட வியப்பு அதிலுள்ள எந்த இனமும் ஏற்றத்தாழ்வினை அடையாமல் ஒவ்வொரு இனமும் அவ்வாறு எழுத்துக்களையும் ஒலியையும் பெற்றிருப்பது. -

5. உயிர் ஒலிகள் அனைத்தும் உதடுகளால் மட்டும் ஒலிக்கக் கூடியவை என்பது கண்டோம். இந்த "மெய் ஒலிகள் அனைத்து உதடு, பல், நாக்கு, மூக்கு தொண்டைகளால் மட்டுமே ஒலிக்கக் கூடியவை. இவற்றுள் எந்த ஒலியை ஒலிக்கவும் தொண்டைக்குக் கீழ் வேலையே இல்லை. சில மொழி ஒலிகளை அடிவயிற்றிலிருந்து ஒசைகளைக் கிளப்பி, ஹ, ஹா, க்ஷ, க்ஷா என ஒலித்தாக வேண்டும். இத் தொல்லை தமிழ் ஒலிக்கு இல்லை.

6. ஒவ்வொரு மெய்யின்மீதும், ஒவ்வொரு உயிர் ஏற, உயிர் மெய் எழுத்தும், ஒலியும் தோன்றும். அவை "க்உ-கு" "ப்இ-பி' 'ச்எ-செ' என்பன. இவ்வாறு 18 மெய்களிலும் 12 உயிர்கள் ஏறி 216 எழுத்துக்களாக, ஒலிகளாக அமைந்திருக்கின்றன. இது தமிழ் மொழிக்குள்ள சிறப்பு. இவ்வெழுத்துக்களை உயிர் மெய்யெழுத் துக்கள் தனியாக இல்லாமையால், அவ்விரண்டையுமே அவர்கள் தனித்தனியே சேர்த்து ஒலித்துவருகிறார்கள். "மி என எழுத"எம் இ' என இரண்டு எழுத்தையும், 'கு' என எழுத "கே உ' என இரண்டு எழுத்தையும் பயன்படுத்தி வருவதைக் காணலாம்.

7. 'ழ' என ஒலிக்க உலகின் எம்மொழியிலும் எழுத்துக்களில்லை. 'ழ' ஒலி தமிழின் தனிச்சிறப்பான ஒலி,