பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jo — தமிழின் சிறப்டு

மற்றொரு பகுதி. இதன் சாயலை, கருத்தை, இராமலிங்க சுவாமிகளின் அருட்டாக்களில் பல இடங்களிற் காணலாம்.

ஆட்சிக் கலை

கடந்த இரண்டாவது உலகப் போரில் அபிசீனியா நாடு வீழ்ச்சியுற்ற போது மேலை நாட்டுப் பத்திரிகை ஒன்று தனது தலையங்கத்தில் 1000 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே ஆட்சியாக அரசு செலுத்திவந்த உலகின் ஒரே நாடு வீழ்ச்சியடைந்தது என எழுதியிருந்தது. அது உண்மையை உணர வில்லை என்றே தோன்றியது.

2000 ஆண்டுகளுக்கு மேலாகவே தொடர்ந்து ஆட்சி செய்து வந்த உலகின் ஒரேநாடு தமிழகம். பாரத இராமாயண காலத்திலும் தமிழகத்தின்மீது எவரும் படை எடுத்து வந்ததாகச் செய்தியில்லை. அலெச்சாண்டரின் படை காவிரிக் கரையைக்கூடக் கடக்கமுடியவில்லை. இந்தியா முழுவதும் அசோகருடைய கொடி பறந்து கொண்டிருந்த போதும் தமிழகத்தில் தமிழ் மன்னர்களின் கொடியே பறந்து கொண்டிருந்தது. அதுமட்டுமல்ல, இலங்கை, மலாயா, சிங்கப்பூர், கெடா, பர்மா, ஜாவா முதலிய நாடுகளையும் தமிழகம் ஆண்டு வந்திருக்கிறது. ஆகவே, தமிழ் மொழியில் நாடாளும் கலையுண்டா? என்பது.ஒருகேள்வியே இல்லை.ஏனெனில், அது நாடாண்ட மொழி; உள் நாட்டை மட்டுமல்ல, வெளிநாடு களையும் ஆண்டுவந்த ஒரு வல்லரசு மொழியும் ஆகும்.

இதுகாறுங் கூறியவற்றால்தமிழ்மக்களின்,தமிழகத்தின் தமிழ் மொழியின் பல்வேறுகலைகளையும் ஒருவாறு அறியலாம்.