பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. மருத்துவச் சிறப்பு

காலம்

சித்த மருத்துவமும் தமிழ் மருத்துவமும் ஒன்றே. இம் மருத்துவம் பிறந்த காலத்தை அறிந்து கூற இயலாது. கூறவேண்டுமானால் தமிழகத்து மண்ணில் செடி கொடிகள் தோன்றிய காலமே தமிழ் மருத்துவம் தோன்றிய காலம் என்று துணிந்து கூறலாம். - -

மொழி

நாட்டு வைத்தியம் என்று பொதுவாகக் குறிப்பிடப்படுவது மூன்றை ஒன்று சித்த மருத்துவம்; இரண்டு ஆயுர்வேதம்; மூன்று, யூனானி, தமிழ் மருத்துவத்துக்கு மொழி தமிழ் ஆயுர்வேதத்திற்கு மொழிவடமொழி; யூனானிக்குமொழி உருது. யூனாணிக்குத்திசை மேற்கு ஆயுர்வேதத்திற்குத் திசை வடக்கு சித்த வைத்தியத் திற்குத் திசை தெற்கு.

மருந்து தமிழ் மருந்துகள் பெரும்பாலும் பொடியும் கியாழமுமாக இருக்கும். இதனை பசுபம் (பஸ்பம்) என்றும் கசாயம் என்று சொல்வர். ஆயுர்வேத வைத்யம் பெரும்பாலும் தைலமும் திராவகமுமாக இருக்கும். யூனாணி மருந்துகள் பெரும்பாலும் அல்வாவும் லேகியமுமாக இருக்கும்.