பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 C - தமிழின் சிறப்)

பசுபம் (பஸ்பம்)

இரும்பு, வெள்ளி, தங்கம், செம்பு முதலிய உலோகங்கள் ஒன்பது, முத்து, மணி, பவழம் முதலிய இரத்தினங்கள் ஒன்பது. வீரம், பூரம் முதலிய பாசாணங்கள் ஒன்பது. இதனை முறையே நவலோகம், நவஇரத்தினம், நவபாசாணம் என்பர். இந்த மூவொன்பது இருபத்தேழையும் பசுபமாக்கும் முறை சித்த வைத்தியத்தில் மட்டுமே உண்டு. பிற மருத்துவ முறைகளில் இவற்றில் சில பசுபமாகச் செய்யப்படும். எனினும், அதன் மூலம் சித்தவைத்திய முறையாகவே அமைந்திருக்கும்.

எளிது

அலபதி முறையில் ஆங்கிலேயர்கள் இவற்றில் சிலவற்றைப் பசுமாக்குகிறார்கள். ஆனால், விலையுர்ந்த இயந்திரங்களில், அதிகச் சம்பளம் வாங்குகிறவர்களின் கண் காணிப்பில், பெரும் பொருட்செலவில் அவை செய்யப் பெறுகின்றன.சித்த வைத்திய முறையிலோ இரண்டு மூன்று வரட்டிகளைக் கொண்டு, மூலிகைகளின் சாறுகளைத் தடவி, எளிய முறையில், குறைந்த செலவில், சுருங்கிய நேரத்தில், இவை அனைத்தும் பசுபமாக்கப் பெற்று வருகின்றன.

உணவே மருந்து சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்பபுகுரியது. காய்கறிகளெல்லாம் மருந்து, கீரை வகைகளெல்லாம் மருந்து, கடுகு, மிளகு, சீரகம், பூண்டு,

மஞ்சள், சுக்கு,திப்பலி முதலிய கடைச்சரக்குகளெல்லாம் மருந்து, எள்ளு, கடலை, இலுப்பை, வேம்பு முதலிய எண்ணெய்