பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுருத்துவச்சிறப்பு )— J3

வகைகளெல்லாம் மருந்து. சுருக்கமாகச் சொல்லப்போனால் பசுவின் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் அனைத்துமே மருந்து. எனவே மருந்தாக அமைகின்ற இவையே சித்த வைத்திய முறையாகும். தமிழகத்தைத் தவிர பிறநாடுகளில் உணவுப் பொருள்களே மருந்தாக அமைகின்ற முறையைக் காணமுடியாது. தமிழகத்துத் தட்ப, வெப்ப நிலைக்கு ஏற்ப, தமிழ் மக்களுக்குத் தோன்றும் பிணிகளுக்குத் தமிழகத்து மண்ணில் முளைக்கின்ற செடி கொடிகளை மருந்தாகத் தருவதே தமிழ் மருத்துவ முறையாகும்.

கை வைத்தியம்

தாய்வழி மகள், காதுவழி கேட்டுக் கை வைத்தியமாகச் செய்யப்படுகின்ற ஒரு முறையும், தமிழகத்தில் உண்டு. இதையே சித்த வைத்தியம் என்றும், தமிழ் மருத்துவம் என்றும், வீட்டு வைத்தியம் என்றும் கூறுவதுண்டு. இந்தத் தலைமுறையில் நகரங்களில் வாழ்கின்ற படித்த பெண்கள் இம் முறைகளை அடியோடு கைவிட்டு விட்டனர். எனினும் சிற்றுார்களிலுள்ள எளிய குடும்பங்களில், இம்முறை இன்னும் இருந்து வருகிறது.

சிறப்பு

சித்த வைத்தியம், காலத்தால் முந்தியதும், விலையால் குறைந்ததும், கையாள்வதில் சிறந்ததும், பலனால் மிகுந்தமும், தகுதியால் உயர்ந்ததுமாகும். இவ்விதமிருந்தும், மக்களின் உணர்ச்சிக் குறைவும், மருத்துவர்களின் முயற்சிக் குறைவும். அரசினர் கவனக்குறையும் ஒன்று சேர்ந்ததினாலேயே, இச் சித்தவைத்திய முறை அழியத் தொடங்கிவிட்டது.