பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 —[. தமிழின் சிறப்)

ഞഖ്ഥയ്ക്കു மறைந்து போயினர். மறைய மறைய, ஒவ்வொரு சித்த வைத்தியரையும் புதைக்கப் புதைக்க, சில சித்த வைத்திய முறைகளும் புதைக்கப்பெற்றே போயின. -

அழிந்த காரணம்

இந்தத் தவறை நமக்கு முன்னே வாழ்ந்த பெரியோர்கள் செய்யவில்லை. அவர்கள் தாங்கள் கண்ட அருமையான முறைகளைச் சுவடிகளில் எழுதிவைத்தனர். ஆனால் பாவம், அச்சுப் பொறிகளின்மையாலும், ஒலைகளிலேயே எழுதிக் - குவிக்கவேண்டியிருந்தமையாலும், விரிந்த சொற்களில் உள்ள பரந்த முறைகளை, சொற்களைக் குறைத்துக் கவிதைகளாய் அமைத்துச் சுவடிகளாக்கி வைத்துப் போயினர். தமிழ் மன்னர்களுடைய ஆட்சி அழிந்தமையினாலும், ஆங்கில ஆட்சியினரின் அக்கறைக் குறைவினாலும், காலத்தால் பாழ் பட்டும், கடற் கோள்களின் அழிவிற்குள்ளாகியும், கறையான்களால் தின்னப்பட்டும் அவற்றுட் பல சுவடிகள் அழிந்துபோயின. இவை அனைத்திற்கும் தப்பிச் சில நூல்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. இவற்றையுங்கூட, பழஞ்சுவடிகளை ஆடிப் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் விட்டால் புண்ணியம்' என்று ஒரு கொள்கை பரப்பப் பட்டதினால், அந்தப் புண்ணியத்திற் காசைப்பட்டு மீதமிருந்த பழஞ்சுவடிகளையும் சிலர் ஆற்றில் அள்ளிப்போட்டுவிட்டு அமைதி அடைந்தனர்.

அழிந்துபோன நூல்கள் இவ்வாறு அழிந்துபோன மருத்துவ நூல்கள் பல

அவையாவன:

,