பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ಣಕ್ಕೆ DEg - , ' ' , ok D— 87

பிணையல் இரு கைகளால் காட்டும் அவிநயங்கள் என்றாகும். இவற்றுள் ஒற்றைக்கை அவிநயம் 33 வகை: அவை, 1. பதாகை, 2.திரிபதாகை, 3. கத்திரிகை, 4. தூபம், 5. அராளம், 6. இளம்பிறை, 7. சுகதுண்டம், 8. முட்டி, 9. கடகம், 10. சூசி, 11. கமல கோசிகம், 12. காங்கூலம், 13. கபித்தம், 14. விற்பிடி, 15. குடந்தை, 16. அலாபத்திரம், 17 பிரமரம், 18. தாம்பிரசூடம், 19. பசாசம், 20. முகுளம், 21 பிண்டி, 22. தெரிநிலை, 23. மெய்நிலை, 24. உன்னம், 25. மண்டலம், 26. சதுரம், 27. மான்தலை, 28. சங்கு, 29. வண்டு, 30 இலதை, 31. கபோதம், 32. மகாமுகம், 33. வலம்புரி என்பவை. இரட்டைக்கை அவிநயம் 15 வகைகளாகும். '* * அவை: 1. அஞ்சலி, 2.புட்பாஞ்சலி, 3. பதுமாஞ்சலி, 4. கபோதம், 5.கற்கடம், 6.சுபத்திகம்,7.கடகர் வருத்தம், 8.நிடதம்.9.தோரம், 10. உற்சாவிகம், 11. புட்டபுடம், 12. மகரம், 13. சயந்தம், 14. அபயவத்தம், 15. வருத்தமானம் என்பவை. இவை 48ம் எவ்விதம் கை விரல்களால் காட்டுவது என்பதற்கு நூற்பாக்கள் இன்னும் இருக்கின்றன. - .

8. குரவை, வரிக்கூத்து குரவைக் கூத்து வரி கூத்து என்பன அவரவர் பிறந்த நிலத்துத் தன்மையும், தொழில் தன்மையும் தோன்ற நடித்தல் வரி என்பது பெரும்பாலும் வேற்றுருத் தாங்கி நடிப்பது முல்லை நிலத்தில் ஆய்ச்சியர் குரவையும்,குறிஞ்சி நிலத்தில் குன்றக் குரவையும், நெய்தல் நிலத்தில் கானல் வரியும், பாலை நிலத்தில் வேட்டுவ வரியும், மருத நிலத்தில் ஊர்சூழ் வரியும் நிகழ்ந்தனவாகச் சிலப்பதிகாரத்தில் அமைத்திருப்பதை அறிந்து மகிழுங்கள். -