பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 —C தமிழின் சிறப்பு

9. யாழ் பேரியாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என யாழ் நால்வகைப்படும் பேரியாழுக்கு நரம்பு, 21. மகர யாழுக்கு நரம்பு 17 சகோட யாழுக்கு நரம்பு 16. செங்கோட்டி யாழுக்கு நரம்பு 7. ஆகும். -

10. குழல் இது புல்லாங்குழல், வேய்ங்குழல், வங்கியம், வேணு எனப் பெயர் பெறும். அது மூங்கிலாலும் வெண்கலத்தாலும்; சந்தன மரம், செங்காலி மரம், கருங்காலி மரம், ஆகிய மரங்களாலும் செய்யப்பெறும். இவற்றுள் மூங்கில் உயர்தரம்? வெண்கலம் நடுத்தரம் மற்றவை கீழ்த்தரம் ஆகும்.

11. முழவு

முழவு என்பது தோல் கருவிகளாகும். இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண் முழவு, காலை முழவு, என ஏழு வகைப்படும் (அ) 'அகமுழவு, மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, பேரிகை, படாகம், குடமுழா என்பன (ஆ) அகப்புறமுழவு தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் என்பன. (இ) புறமுழவு கணப்பறை முதலியன. (ஈ) புறப்புறமுழவு நெய்தற்பறை முதலியன (உ) “பண்ணமை முழவு நிசாளம், துடுமை, முரசு திமிலை என நான்கு (ஊ) நாண்முழவு நாழிகைப்பறை, (எ) காலை முழவு துடி என்றாகும். இவற்றுள் (அ) உயர்தரம், (ஆ) நடுத்தரம், (இ) கடைததரம.