பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(இசைச் சிறப்பு D— 89

12. ஏழிசை

ஏழிசைகளும் தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனக் குறிப்பிடப்பெறும். இதனை, வடநூலார் சட்சம், ரிடபம், மத்திமம், காந்தாரம், பஞ்சமம், தைவதம், நிடாதம் எனப் பெயரிட்டு, இச் சொற்களின் ஏழு முதல் எழுத்துக்களைக் கொண்டு சரி,க, ம,ப,த,நி, எனச் சுர வரிசையிட்டனர். இது தமிழிசையாய ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற ஏழிசையாகும். இதனை ஆஈ, ஊ, ஏ.ஐ.ஒ.ஒள வெனும் இவ்வேழெழுத்தும் ஏழிசைக்கு குரிய" என்ற திவாகரச் சூத்திரம் மெய்ப்பிக்கும்.

13. பெயர்

தமிழில் இசை, பண் என்பவைகளை வடமொழியாளர் சுரம், இராகம் எனக் கூறுவர். தமிழில் அலகு என்று சொல்லப்படுவதே வடமொழியில் சுருதி என்றாகும். தமிழில் ஆளத்தி என்று கூறுவதையே வடமொழியினர் ஆலாபனம் எனக் கூறுகூர்.

14. அலகுகள்

ஏழிசைகளாகிய குரல், துத்தம் முதலி யவைகளுக்குத் தமிழில் 22 அலகுகள் கூறப்பட்டுள்ளன. வடமொழியிலும் இவ்வாறே 22 சுருதிகள் கூறப்பட்டுள்ளன. என்றாலும், தமிழ் அலகுகள் 44.32,432 வடமொழி அலகுகள் 432,443,2, என ஆகும். இந்த இசை வரிசையைத் தமிழில் கோவையெனவும் கூறுவதுண்டு. இவ்வரிசை அமைப்புகள் ஆயப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை திருகோணப்பாலை என நால்வகைப்படும். இவற்றினின்றும் தோன்றுவதே இசையாகும்.